At-Takwir

سورة التكوير

சூரா 81 · மக்கிய்யா · 29 வசனங்கள்

81:1ஜுஸ் 30 · ப. 586

إِذَا الشَّمْسُ كُوِّرَتْ1

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
81:2ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا النُّجُومُ انْكَدَرَتْ2

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:3ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْجِبَالُ سُيِّرَتْ3

மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:4ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْعِشَارُ عُطِّلَتْ4

சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
81:5ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْوُحُوشُ حُشِرَتْ5

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:6ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْبِحَارُ سُجِّرَتْ6

கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:7ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا النُّفُوسُ زُوِّجَتْ7

உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:8ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ8

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:9ஜுஸ் 30 · ப. 586

بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ9

"எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
81:10ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الصُّحُفُ نُشِرَتْ10

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:11ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا السَّمَاءُ كُشِطَتْ11

வானம் அகற்றப்படும் போது-
81:12ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْجَحِيمُ سُعِّرَتْ12

நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:13ஜுஸ் 30 · ப. 586

وَإِذَا الْجَنَّةُ أُزْلِفَتْ13

சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:14ஜுஸ் 30 · ப. 586

عَلِمَتْ نَفْسٌ مَا أَحْضَرَتْ14

ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:15ஜுஸ் 30 · ப. 586

فَلَا أُقْسِمُ بِالْخُنَّسِ15

எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:16ஜுஸ் 30 · ப. 586

الْجَوَارِ الْكُنَّسِ16

முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
81:17ஜுஸ் 30 · ப. 586

وَاللَّيْلِ إِذَا عَسْعَسَ17

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
81:18ஜுஸ் 30 · ப. 586

وَالصُّبْحِ إِذَا تَنَفَّسَ18

மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
81:19ஜுஸ் 30 · ப. 586

إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ19

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:20ஜுஸ் 30 · ப. 586

ذِي قُوَّةٍ عِنْدَ ذِي الْعَرْشِ مَكِينٍ20

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:21ஜுஸ் 30 · ப. 586

مُطَاعٍ ثَمَّ أَمِينٍ21

(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:22ஜுஸ் 30 · ப. 586

وَمَا صَاحِبُكُمْ بِمَجْنُونٍ22

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:23ஜுஸ் 30 · ப. 586

وَلَقَدْ رَآهُ بِالْأُفُقِ الْمُبِينِ23

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:24ஜுஸ் 30 · ப. 586

وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِينٍ24

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
81:25ஜுஸ் 30 · ப. 586

وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَانٍ رَجِيمٍ25

அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:26ஜுஸ் 30 · ப. 586

فَأَيْنَ تَذْهَبُونَ26

எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
81:27ஜுஸ் 30 · ப. 586

إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِلْعَالَمِينَ27

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
81:28ஜுஸ் 30 · ப. 586

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَسْتَقِيمَ28

உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
81:29ஜுஸ் 30 · ப. 586

وَمَا تَشَاءُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ29

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Jibreel - At-Takwir · Tlawati