Al-Infitar

سورة الإنفطار

சூரா 82 · மக்கிய்யா · 19 வசனங்கள்

82:1ஜுஸ் 30 · ப. 587

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ1

வானம் பிளந்து விடும்போது
82:2ஜுஸ் 30 · ப. 587

وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ2

நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
82:3ஜுஸ் 30 · ப. 587

وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ3

கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
82:4ஜுஸ் 30 · ப. 587

وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ4

கப்றுகள் திறக்கப்படும் போது,
82:5ஜுஸ் 30 · ப. 587

عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ5

ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
82:6ஜுஸ் 30 · ப. 587

يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ6

மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
82:7ஜுஸ் 30 · ப. 587

الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ7

அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
82:8ஜுஸ் 30 · ப. 587

فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ8

எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
82:9ஜுஸ் 30 · ப. 587

كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ9

இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
82:10ஜுஸ் 30 · ப. 587

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ10

நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
82:11ஜுஸ் 30 · ப. 587

كِرَامًا كَاتِبِينَ11

(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
82:12ஜுஸ் 30 · ப. 587

يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ12

நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
82:13ஜுஸ் 30 · ப. 587

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ13

நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
82:14ஜுஸ் 30 · ப. 587

وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ14

இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
82:15ஜுஸ் 30 · ப. 587

يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ15

நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
82:16ஜுஸ் 30 · ப. 587

وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ16

மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
82:17ஜுஸ் 30 · ப. 587

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ17

நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
82:18ஜுஸ் 30 · ப. 587

ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ18

பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
82:19ஜுஸ் 30 · ப. 587

يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا ۖ وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ19

அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு