சூரா 82 · ஜுஸ் 30
Al-Infitar · 82:6
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
தஃப்சீர்
82.6. இறைவனை நிராகரித்த மனிதனே! உன் இறைவன் தன் கிருபையினால் உடனுக்குடன் உன்னைத் தண்டிக்காமல் அவகாசம் அளித்த போது அவனது கட்டளைக்கு மாறாகச் செயல்பட எது உன்னைத் தூண்டியது?
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்