At-Tariq

سورة الطارق

சூரா 86 · மக்கிய்யா · 17 வசனங்கள்

86:1ஜுஸ் 30 · ப. 591

وَالسَّمَاءِ وَالطَّارِقِ1

வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:2ஜுஸ் 30 · ப. 591

وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ2

தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:3ஜுஸ் 30 · ப. 591

النَّجْمُ الثَّاقِبُ3

அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86:4ஜுஸ் 30 · ப. 591

إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ4

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
86:5ஜுஸ் 30 · ப. 591

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ5

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:6ஜுஸ் 30 · ப. 591

خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ6

குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:7ஜுஸ் 30 · ப. 591

يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ7

முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:8ஜுஸ் 30 · ப. 591

إِنَّهُ عَلَىٰ رَجْعِهِ لَقَادِرٌ8

இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
86:9ஜுஸ் 30 · ப. 591

يَوْمَ تُبْلَى السَّرَائِرُ9

இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
86:10ஜுஸ் 30 · ப. 591

فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ10

மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
86:11ஜுஸ் 30 · ப. 591

وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ11

(திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12ஜுஸ் 30 · ப. 591

وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ12

(தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86:13ஜுஸ் 30 · ப. 591

إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ13

நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
86:14ஜுஸ் 30 · ப. 591

وَمَا هُوَ بِالْهَزْلِ14

அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86:15ஜுஸ் 30 · ப. 591

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا15

நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:16ஜுஸ் 30 · ப. 591

وَأَكِيدُ كَيْدًا16

நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
86:17ஜுஸ் 30 · ப. 591

فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا17

எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு