Al-A'la

سورة الأعلى

சூரா 87 · மக்கிய்யா · 19 வசனங்கள்

87:1ஜுஸ் 30 · ப. 591

سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى1

(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
87:2ஜுஸ் 30 · ப. 591

الَّذِي خَلَقَ فَسَوَّىٰ2

அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3ஜுஸ் 30 · ப. 591

وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ3

மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
87:4ஜுஸ் 30 · ப. 591

وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ4

அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
87:5ஜுஸ் 30 · ப. 591

فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ5

பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
87:6ஜுஸ் 30 · ப. 591

سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ6

(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
87:7ஜுஸ் 30 · ப. 591

إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ7

அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
87:8ஜுஸ் 30 · ப. 591

وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ8

அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
87:9ஜுஸ் 30 · ப. 591

فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ9

ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
87:10ஜுஸ் 30 · ப. 591

سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ10

(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
87:11ஜுஸ் 30 · ப. 592

وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى11

ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
87:12ஜுஸ் 30 · ப. 592

الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ12

அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
87:13ஜுஸ் 30 · ப. 592

ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ13

பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
87:14ஜுஸ் 30 · ப. 592

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ14

தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
87:15ஜுஸ் 30 · ப. 592

وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ15

மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
87:16ஜுஸ் 30 · ப. 592

بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا16

எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
87:17ஜுஸ் 30 · ப. 592

وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ17

ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
87:18ஜுஸ் 30 · ப. 592

إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ18

நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
87:19ஜுஸ் 30 · ப. 592

صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ19

இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு