Al-Mutaffifin

سورة المطففين

சூரா 83 · மக்கிய்யா · 36 வசனங்கள்

83:1ஜுஸ் 30 · ப. 587

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ1

அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
83:2ஜுஸ் 30 · ப. 587

الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ2

அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:3ஜுஸ் 30 · ப. 587

وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ3

ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:4ஜுஸ் 30 · ப. 587

أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ4

நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5ஜுஸ் 30 · ப. 588

لِيَوْمٍ عَظِيمٍ5

மகத்தான ஒரு நாளுக்காக,
83:6ஜுஸ் 30 · ப. 588

يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ6

அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
83:7ஜுஸ் 30 · ப. 588

كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ7

ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
83:8ஜுஸ் 30 · ப. 588

وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ8

'ஸிஜ்ஜீன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:9ஜுஸ் 30 · ப. 588

كِتَابٌ مَرْقُومٌ9

அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
83:10ஜுஸ் 30 · ப. 588

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ10

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
83:11ஜுஸ் 30 · ப. 588

الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ11

அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
83:12ஜுஸ் 30 · ப. 588

وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ12

வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
83:13ஜுஸ் 30 · ப. 588

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ13

நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், "அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே" என்று கூறுகின்றான்.
83:14ஜுஸ் 30 · ப. 588

كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ14

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
83:15ஜுஸ் 30 · ப. 588

كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لَمَحْجُوبُونَ15

(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
83:16ஜுஸ் 30 · ப. 588

ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ16

பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
83:17ஜுஸ் 30 · ப. 588

ثُمَّ يُقَالُ هَٰذَا الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ17

"எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது" என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
83:18ஜுஸ் 30 · ப. 588

كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ18

நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் "இல்லிய்யீ"னில் இருக்கிறது.
83:19ஜுஸ் 30 · ப. 588

وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ19

"இல்லிய்யுன்' என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
83:20ஜுஸ் 30 · ப. 588

كِتَابٌ مَرْقُومٌ20

(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
83:21ஜுஸ் 30 · ப. 588

يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ21

(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
83:22ஜுஸ் 30 · ப. 588

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ22

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) 'நயீம்' என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
83:23ஜுஸ் 30 · ப. 588

عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ23

ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
83:24ஜுஸ் 30 · ப. 588

تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ24

அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
83:25ஜுஸ் 30 · ப. 588

يُسْقَوْنَ مِنْ رَحِيقٍ مَخْتُومٍ25

(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
83:26ஜுஸ் 30 · ப. 588

خِتَامُهُ مِسْكٌ ۚ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ26

அதன் முத்திரை கஸ்தூரியாகும், எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
83:27ஜுஸ் 30 · ப. 588

وَمِزَاجُهُ مِنْ تَسْنِيمٍ27

இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
83:28ஜுஸ் 30 · ப. 588

عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ28

அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
83:29ஜுஸ் 30 · ப. 588

إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ29

நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
83:30ஜுஸ் 30 · ப. 588

وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ30

அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
83:31ஜுஸ் 30 · ப. 588

وَإِذَا انْقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انْقَلَبُوا فَكِهِينَ31

இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
83:32ஜுஸ் 30 · ப. 588

وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَٰؤُلَاءِ لَضَالُّونَ32

மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், "நிச்சமயாக இவர்களே வழி தவறியவர்கள்" என்றும் கூறுவார்கள்.
83:33ஜுஸ் 30 · ப. 588

وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ33

(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
83:34ஜுஸ் 30 · ப. 589

فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ34

ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்து சிரிப்பார்கள்.
83:35ஜுஸ் 30 · ப. 589

عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ35

ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
83:36ஜுஸ் 30 · ப. 589

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ36

காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Ali Jaber - Al-Mutaffifin · Tlawati