Ad-Duha

سورة الضحى

சூரா 93 · மக்கிய்யா · 11 வசனங்கள்

93:1ஜுஸ் 30 · ப. 596

وَالضُّحَىٰ1

முற்பகல் மீது சத்தியமாக
93:2ஜுஸ் 30 · ப. 596

وَاللَّيْلِ إِذَا سَجَىٰ2

ஒடுங்கிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக-
93:3ஜுஸ் 30 · ப. 596

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ3

உம்முடைய இறைவன் உம்மைக் கை விடவுமில்லை; அவன் (உம்மை) வெறுக்கவுமில்லை.
93:4ஜுஸ் 30 · ப. 596

وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَىٰ4

மேலும் பிந்தியது (மறுமை) முந்தியதை (இம்மையை) விட உமக்கு மேலானதாகும்.

وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰ5

இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.
93:6ஜுஸ் 30 · ப. 596

أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَىٰ6

(நபியே!) அவன் உம்மை அநாதையாகக் கண்டு, அப்பால் (உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா?
93:7ஜுஸ் 30 · ப. 596

وَوَجَدَكَ ضَالًّا فَهَدَىٰ7

இன்னும், உம்மை வழியற்றவராகக் கண்டு அவன், (உம்மை) நேர்வழியில் செலுத்தினான்.
93:8ஜுஸ் 30 · ப. 596

وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَىٰ8

மேலும், அவன் உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச் செல்வத்தால்) தேவையில்லாதவராக்கினான்.
93:9ஜுஸ் 30 · ப. 596

فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ9

எனவே, நீர் அநாதையைக் கடிந்து கொள்ளாதீர்.
93:10ஜுஸ் 30 · ப. 596

وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ10

யாசிப்போரை விரட்டாதீர்.
93:11ஜுஸ் 30 · ப. 596

وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ11

மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Abdullah Basfar - Ad-Duha · Tlawati