Al-Mursalat

سورة المرسلات

சூரா 77 · மக்கிய்யா · 50 வசனங்கள்

77:1ஜுஸ் 29 · ப. 580

وَالْمُرْسَلَاتِ عُرْفًا1

தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை (காற்று)கள் மீது சத்தியமாக
77:2ஜுஸ் 29 · ப. 580

فَالْعَاصِفَاتِ عَصْفًا2

வேகமாக வீசுகிறவை (புயல் காற்றுகள்) மீது (சத்தியமாக)-
77:3ஜுஸ் 29 · ப. 580

وَالنَّاشِرَاتِ نَشْرًا3

(மேகங்களைப்) பரவலாகப் பரப்பும் (மழைக் காற்றுகள்) மீது சத்தியமாக-
77:4ஜுஸ் 29 · ப. 580

فَالْفَارِقَاتِ فَرْقًا4

(சத்தியத்தையும் அசத்தியத்தையும்) வேறுபடுத்தி காட்டுவோர் (வானவர்கள்) மீதும் (சத்தியமாக)-
77:5ஜுஸ் 29 · ப. 580

فَالْمُلْقِيَاتِ ذِكْرًا5

(இதயங்களில்) உபதேசத்தைப் போடுவோர் (வானவர்) மீதும் (சத்தியமாக)-
77:6ஜுஸ் 29 · ப. 580

عُذْرًا أَوْ نُذْرًا6

(அந்த உபதேசம்) மன்னிப்பையோ, அல்லது எச்சரிக்கையையோ (உள்ளடக்கியதாகும்)
77:7ஜுஸ் 29 · ப. 580

إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ7

நிச்சயமாக உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழ்வதேயாகும்.
77:8ஜுஸ் 29 · ப. 580

فَإِذَا النُّجُومُ طُمِسَتْ8

இன்னும், நட்சத்திரங்கள் அழிக்கப்படும்போது-
77:9ஜுஸ் 29 · ப. 580

وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ9

மேலும், வானம் பிளக்கப்படும் போது-
77:10ஜுஸ் 29 · ப. 580

وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ10

அன்றியும், மலைகள் (தூசிகளைப் போல்) பறக்கடிக்கப்படும்போது-
77:11ஜுஸ் 29 · ப. 580

وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ11

மேலும், தூதர்களுக்கு(த் தம் சமூகத்தாருக்காகச் சாட்சியம் கூற) நேரம் குறிக்கப்படும்போது-
77:12ஜுஸ் 29 · ப. 580

لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ12

எந்த நாள்வரை (இவையெல்லாம்) பிற்படுத்தப்பட்டிருக்கின்றன?
77:13ஜுஸ் 29 · ப. 580

لِيَوْمِ الْفَصْلِ13

தீர்ப்புக்குரிய நாளுக்காகத்தான்.
77:14ஜுஸ் 29 · ப. 580

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ14

மேலும், தீர்ப்புக்குரிய நாள் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?
77:15ஜுஸ் 29 · ப. 580

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ15

(நம் வசனங்களைப்) பொய்ப்பிப்போருக்கு அந்நாளில் கேடுதான்.
77:16ஜுஸ் 29 · ப. 580

أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ16

முன்னோர்(களில் குற்றவாளி)களை நாம் அழிக்கவில்லையா?
77:17ஜுஸ் 29 · ப. 580

ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ17

பிறகு பின்னுள்ளவர்(களில் குற்றவாளி)களையும் (அழிந்தவர்களைப்) பின் தொடரச் செய்வோம்.
77:18ஜுஸ் 29 · ப. 580

كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ18

குற்றவாளிகளை இவ்வாறுதான் நாம் செய்வோம் (தண்டிப்போம்).
77:19ஜுஸ் 29 · ப. 580

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ19

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:20ஜுஸ் 29 · ப. 581

أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ20

அற்ப நீர்த்துளியிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?
77:21ஜுஸ் 29 · ப. 581

فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ21

பின்னர் அதனைப் பத்திரமான இடத்தில் (கர்ப்பத்தில்) உறுதியாக ஆக்கிவைத்தோம்.
77:22ஜுஸ் 29 · ப. 581

إِلَىٰ قَدَرٍ مَعْلُومٍ22

ஒரு குறிப்பிடட (கால) அளவு வரை.
77:23ஜுஸ் 29 · ப. 581

فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ23

இவ்வாறு நாமே அதை அமைத்திருக்கின்றோம். அமைப்போரில் நாமே மேலானோர்.
77:24ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ24

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:25ஜுஸ் 29 · ப. 581

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا25

பூமியை உங்களை அணைத்து (இடம் தந்து)க் கொண்டிருப்பதாக நாம் ஆக்கவில்லையா?
77:26ஜுஸ் 29 · ப. 581

أَحْيَاءً وَأَمْوَاتًا26

உயிருள்ளோருக்கும், மரித்தோருக்கும் (அது இடம் அளிக்கிறது).
77:27ஜுஸ் 29 · ப. 581

وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا27

அன்றியும், அதில் உயர்ந்த மலைகளையும் நாம் ஆக்கினோம்; இனிமையான தண்ணீரையும் நாம் உங்களுக்குப் புகட்டினோம்.
77:28ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ28

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:29ஜுஸ் 29 · ப. 581

انْطَلِقُوا إِلَىٰ مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ29

"நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
77:30ஜுஸ் 29 · ப. 581

انْطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ30

மூன்று கிளைகளுடைய (நரகப் புகை) நிழலின் பால் நடப்பீர்களாக.
77:31ஜுஸ் 29 · ப. 581

لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ31

(அது) நிழலளிப்பதுமல்ல, (நரகின்) கடுந்தழலை விட்டுக் காப்பாற்றுவதுமல்ல.
77:32ஜுஸ் 29 · ப. 581

إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ32

நிச்சயமாக அது பெரிய மாளிகைகளைப் போன்ற நெருப்புப் பொறிகளைக் கொண்டு வீசி எறிந்து கொண்டு இருக்கும்.
77:33ஜுஸ் 29 · ப. 581

كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ33

நிச்சயமாக அது மஞ்சள் நிறமுள்ள ஒட்டகைகள் போல் இருக்கும்.
77:34ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ34

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:35ஜுஸ் 29 · ப. 581

هَٰذَا يَوْمُ لَا يَنْطِقُونَ35

இது, அவர்கள் (எதுவும்) பேச முடியாத நாள்.
77:36ஜுஸ் 29 · ப. 581

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ36

அன்றியும் (தப்புவிப்பதற்காகப்) புகழ் கூறவும் அவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
77:37ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ37

பொய்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:38ஜுஸ் 29 · ப. 581

هَٰذَا يَوْمُ الْفَصْلِ ۖ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ38

இது தீர்ப்புக்குரிய நாளாகும். உங்களையும், (உங்களுக்கு) முன் இருந்தோரையும் நாம் ஒன்று சேர்க்கும் (நாள்).
77:39ஜுஸ் 29 · ப. 581

فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ39

எனவே, (தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள) உங்களிடம் சூழ்ச்சியிருக்குமானால், சூழ்ச்சி செய்து பாருங்கள்.
77:40ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ40

பொய்ப்பிப்வர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:41ஜுஸ் 29 · ப. 581

إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ41

நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் (குளிர்) நிழல்களிலும், நீர்ச் சுனைகளிலும் இருப்பார்கள்.
77:42ஜுஸ் 29 · ப. 581

وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ42

இன்னும், அவர்கள் விரும்பும் கனிவகைகளும் உண்டு.
77:43ஜுஸ் 29 · ப. 581

كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ43

"நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்) செயல்களின் காரணமாக, சிரமமின்றி, தாராளமாக புசியுங்கள் இன்னும் பருகுங்கள்" (என்று கூறப்படும்).
77:44ஜுஸ் 29 · ப. 581

إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ44

நிச்சயமாக, இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுப்போம்.
77:45ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ45

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:46ஜுஸ் 29 · ப. 581

كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ46

(பொய்யாக்குவோரே உலகில்) இன்னும் கொஞ்ச (கால)ம் நீங்கள் புசித்துக் கொண்டும், சுகித்துக்கொண்டும் இருங்கள் - நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகளே.
77:47ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ47

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:48ஜுஸ் 29 · ப. 581

وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ48

'நீங்கள் குனிந்து வணங்குங்கள்' என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் குனிந்து வணங்கமாட்டார்கள்.
77:49ஜுஸ் 29 · ப. 581

وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ49

பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
77:50ஜுஸ் 29 · ப. 581

فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ50

எனவே, இதன் பின்னர் எந்த விஷயத்தின் மீதுதான் அவர்கள் ஈமான் கொள்வார்கள்?

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு