சூரா 7 · ஜுஸ் 8
Al-A'raf · 7:32
قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ ۚ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ ۗ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ
(நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
தஃப்சீர்
7.32. தூதரே! அல்லாஹ் அனுமதித்த ஆடையையும் தூய்மையான உணவுகளையும் தடைசெய்யும் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “உங்களை அழகுபடுத்தக்கூடிய ஆடையை உங்களுக்குத் தடைசெய்தது யார்? அவன் வழங்கிய தூய்மையான உணவுகளையும் பானங்களையும் பிற பொருள்களையும் உங்களுக்குத் தடைசெய்தது யார்? தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூய்மையான இந்த பொருள்கள் இவ்வுலகில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கியவையாகும். இவ்வுலகில் நம்பிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களும் அதில் பங்கு பெற்றாலும் மறுமை நாளில் இவை நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உரியவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு அவற்றில் எந்தப் பங்கும் கிடைக்காது. ஏனெனில் சுவனம் நிராகரிப்பாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்கத்தின் மூலம் நாம் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றோம். அவர்கள்தாம் இவற்றைக் கொண்டு பயனடைவார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்