சூரா 7 · ஜுஸ் 8

Al-A'raf · 7:31

۞ يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.

தஃப்சீர்

7.31. ஆதமுடைய மக்களே! உங்களின் மறைவிடங்களை மறைத்து, உங்களை அழகுபடுத்தும் தூய்மையான ஆடையை தொழுகையின்போதும் தவாபின் போதும் அணிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனுமதித்த தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள். அவற்றில் நடுநிலையை மீறாதீர்கள். அனுமதிக்கப்பட்டதை மீறி தடைசெய்யப்பட்டதற்கு சென்றுவிடாதீர்கள். நிச்சயமாக நடுநிலையைப் பேணாமல் வரம்புமீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்