சூரா 7 · ஜுஸ் 8

Al-A'raf · 7:33

قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ سُلْطَانًا وَأَنْ تَقُولُوا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

"என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள், பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.

தஃப்சீர்

7.33. தூதரே! அல்லாஹ் அனுமதித்ததைத் தடைசெய்யும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது வெளிப்படையான மறைமுகமான மானக்கேடானவற்றைத் தடைசெய்துள்ளான். அவை அருவருப்பான பாவங்களாகும். அனைத்துப் பாவங்களையும் மக்களின் உயிர்களிலும் செல்வங்களிலும் மானங்களிலும் வரம்புமீறுவதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குவதையும் அவன் தடைசெய்துள்ளான். அதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவனுடைய பெயர்களில், பண்புகளில், செயல்களில் மார்க்கத்தில் அறிவின்றி அவன் மீது அவதூறு கூறுவதையும் அவன் தடைசெய்துள்ளான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்