சூரா 7 · ஜுஸ் 8
Al-A'raf · 7:45
الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا وَهُمْ بِالْآخِرَةِ كَافِرُونَ
(ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
தஃப்சீர்
7.45. இந்த அநியாயக்காரர்கள் தங்களைத் தாங்களே அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக் கொண்டிருந்தது மட்டுமின்றி மற்றவர்களையும் அதனை விட்டுத் தடுத்துக் கொண்டிருந்தார்கள். சத்தியப் பாதை யாரும் செல்ல முடியாதவாறு கோணலாகிவிட வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். அவர்கள் மறுமை நாளை நிராகரித்தோர், அதற்கான தயாரிப்பில் ஈடுபடாதோர்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்