சூரா 7 · ஜுஸ் 8
Al-A'raf · 7:44
وَنَادَىٰ أَصْحَابُ الْجَنَّةِ أَصْحَابَ النَّارِ أَنْ قَدْ وَجَدْنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَهَلْ وَجَدْتُمْ مَا وَعَدَ رَبُّكُمْ حَقًّا ۖ قَالُوا نَعَمْ ۚ فَأَذَّنَ مُؤَذِّنٌ بَيْنَهُمْ أَنْ لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ
சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, "எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்றுக் கொண்டோம்" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.
தஃப்சீர்
7.44. சுவனவாசிகள், நரகவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தயார் செய்யப்பட்டுள்ள இடத்தில் நுழைந்த பிறகு சுவனவாசிகள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த சுவனத்தை நாங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டோம். அவன் எங்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்தான். நிராகரிப்பாளர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்த நரகத்தை நீங்கள் நிதர்சனமாகப் பெற்றுக் கொண்டீர்களா?” அதற்கு நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்த நரகத்தை நாங்கள் உண்மையாகப் பெற்றுக் கொண்டோம்.” அப்பொழுது ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்வார்: “அல்லாஹ் அநியாயக்காரர்களை தன் அருளை விட்டும் தூரமாக்குவானாக. உலக வாழ்வில் அல்லாஹ் தன் அருள் வாயில்களை அவர்களுக்காகத் திறந்து வைத்திருந்தான். ஆயினும் அவர்களை அவற்றை விட்டும் முகந்திருப்பிக் கொண்டார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்