Abasa

سورة عبس

சூரா 80 · மக்கிய்யா · 42 வசனங்கள்

80:1ஜுஸ் 30 · ப. 585

عَبَسَ وَتَوَلَّىٰ1

அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2ஜுஸ் 30 · ப. 585

أَنْ جَاءَهُ الْأَعْمَىٰ2

அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3ஜுஸ் 30 · ப. 585

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ3

(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4ஜுஸ் 30 · ப. 585

أَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرَىٰ4

அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.
80:5ஜுஸ் 30 · ப. 585

أَمَّا مَنِ اسْتَغْنَىٰ5

(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6ஜுஸ் 30 · ப. 585

فَأَنْتَ لَهُ تَصَدَّىٰ6

நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7ஜுஸ் 30 · ப. 585

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ7

ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8ஜுஸ் 30 · ப. 585

وَأَمَّا مَنْ جَاءَكَ يَسْعَىٰ8

ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9ஜுஸ் 30 · ப. 585

وَهُوَ يَخْشَىٰ9

அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10ஜுஸ் 30 · ப. 585

فَأَنْتَ عَنْهُ تَلَهَّىٰ10

அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11ஜுஸ் 30 · ப. 585

كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ11

அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12ஜுஸ் 30 · ப. 585

فَمَنْ شَاءَ ذَكَرَهُ12

எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13ஜுஸ் 30 · ப. 585

فِي صُحُفٍ مُكَرَّمَةٍ13

(அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:14ஜுஸ் 30 · ப. 585

مَرْفُوعَةٍ مُطَهَّرَةٍ14

உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15ஜுஸ் 30 · ப. 585

بِأَيْدِي سَفَرَةٍ15

(வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16ஜுஸ் 30 · ப. 585

كِرَامٍ بَرَرَةٍ16

(லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:17ஜுஸ் 30 · ப. 585

قُتِلَ الْإِنْسَانُ مَا أَكْفَرَهُ17

(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:18ஜுஸ் 30 · ப. 585

مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ18

எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:19ஜுஸ் 30 · ப. 585

مِنْ نُطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ19

(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20ஜுஸ் 30 · ப. 585

ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ20

பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21ஜுஸ் 30 · ப. 585

ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ21

பின் அவனை மரிக்கச் செய்து, அவனை கப்ரில்' ஆக்குகிறான்.
80:22ஜுஸ் 30 · ப. 585

ثُمَّ إِذَا شَاءَ أَنْشَرَهُ22

பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:23ஜுஸ் 30 · ப. 585

كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ23

(இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24ஜுஸ் 30 · ப. 585

فَلْيَنْظُرِ الْإِنْسَانُ إِلَىٰ طَعَامِهِ24

எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:25ஜுஸ் 30 · ப. 585

أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا25

நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26ஜுஸ் 30 · ப. 585

ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا26

பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27ஜுஸ் 30 · ப. 585

فَأَنْبَتْنَا فِيهَا حَبًّا27

பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:28ஜுஸ் 30 · ப. 585

وَعِنَبًا وَقَضْبًا28

திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:29ஜுஸ் 30 · ப. 585

وَزَيْتُونًا وَنَخْلًا29

ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
80:30ஜுஸ் 30 · ப. 585

وَحَدَائِقَ غُلْبًا30

அடர்ந்த தோட்டங்களையும்,
80:31ஜுஸ் 30 · ப. 585

وَفَاكِهَةً وَأَبًّا31

பழங்களையும், தீவனங்களையும்-
80:32ஜுஸ் 30 · ப. 585

مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ32

(இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33ஜுஸ் 30 · ப. 585

فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ33

ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:34ஜுஸ் 30 · ப. 585

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ34

அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35ஜுஸ் 30 · ப. 585

وَأُمِّهِ وَأَبِيهِ35

தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36ஜுஸ் 30 · ப. 585

وَصَاحِبَتِهِ وَبَنِيهِ36

தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37ஜுஸ் 30 · ப. 585

لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ37

அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38ஜுஸ் 30 · ப. 585

وُجُوهٌ يَوْمَئِذٍ مُسْفِرَةٌ38

அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
80:39ஜுஸ் 30 · ப. 585

ضَاحِكَةٌ مُسْتَبْشِرَةٌ39

சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40ஜுஸ் 30 · ப. 585

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ40

ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41ஜுஸ் 30 · ப. 586

تَرْهَقُهَا قَتَرَةٌ41

அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42ஜுஸ் 30 · ப. 586

أُولَٰئِكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ42

அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Salah Bukhatir - Abasa · Tlawati