Al-Balad

سورة البلد

சூரா 90 · மக்கிய்யா · 20 வசனங்கள்

90:1ஜுஸ் 30 · ப. 594

لَا أُقْسِمُ بِهَٰذَا الْبَلَدِ1

இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
90:2ஜுஸ் 30 · ப. 594

وَأَنْتَ حِلٌّ بِهَٰذَا الْبَلَدِ2

நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில்,
90:3ஜுஸ் 30 · ப. 594

وَوَالِدٍ وَمَا وَلَدَ3

பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக,
90:4ஜுஸ் 30 · ப. 594

لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ4

திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம்.
90:5ஜுஸ் 30 · ப. 594

أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ5

'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்' என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
90:6ஜுஸ் 30 · ப. 594

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا6

"ஏராளமான பொருளை நான் அழித்தேன்" என்று அவன் கூறுகிறான்.
90:7ஜுஸ் 30 · ப. 594

أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ7

தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
90:8ஜுஸ் 30 · ப. 594

أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ8

அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
90:9ஜுஸ் 30 · ப. 594

وَلِسَانًا وَشَفَتَيْنِ9

மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
90:10ஜுஸ் 30 · ப. 594

وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ10

அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
90:11ஜுஸ் 30 · ப. 594

فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ11

ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12ஜுஸ் 30 · ப. 594

وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ12

(நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும்.
90:13ஜுஸ் 30 · ப. 594

فَكُّ رَقَبَةٍ13

(அது) ஓர் அடிமையை விடுவித்தல்-
90:14ஜுஸ் 30 · ப. 594

أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ14

அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.
90:15ஜுஸ் 30 · ப. 594

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ15

உறவினனான ஓர் அநாதைக்கோ,
90:16ஜுஸ் 30 · ப. 594

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ16

அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
90:17ஜுஸ் 30 · ப. 594

ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ17

பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.
90:18ஜுஸ் 30 · ப. 594

أُولَٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ18

அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
90:19ஜுஸ் 30 · ப. 595

وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ19

ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர்.
90:20ஜுஸ் 30 · ப. 595

عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ20

அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Ayyub - Al-Balad · Tlawati