Al-Inshiqaq

سورة الإنشقاق

சூரா 84 · மக்கிய்யா · 25 வசனங்கள்

84:1ஜுஸ் 30 · ப. 589

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ1

வானம் பிளந்துவிடும் போது
84:2ஜுஸ் 30 · ப. 589

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ2

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபனியும் போது-
84:3ஜுஸ் 30 · ப. 589

وَإِذَا الْأَرْضُ مُدَّتْ3

இன்னும், பூமி விரிக்கப்பட்டு,
84:4ஜுஸ் 30 · ப. 589

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ4

அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது-
84:5ஜுஸ் 30 · ப. 589

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ5

தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது.
84:6ஜுஸ் 30 · ப. 589

يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ6

மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும் வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
84:7ஜுஸ் 30 · ப. 589

فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ7

ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக்கையில் கொடுக்கப்படுகின்றதோ,
84:8ஜுஸ் 30 · ப. 589

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا8

அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான்.
84:9ஜுஸ் 30 · ப. 589

وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا9

இன்னும், தன்னைச் சார்ந்தோரிடமும் மகிழ்வுடன் திரும்புவான்.
84:10ஜுஸ் 30 · ப. 589

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ10

ஆனால், எவனுடைய பட்டோலை அவனுடைய முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்றதோ-
84:11ஜுஸ் 30 · ப. 589

فَسَوْفَ يَدْعُو ثُبُورًا11

அவன் (தன்குக்) 'கேடு' தான் எனக் கூவியவனாக-
84:12ஜுஸ் 30 · ப. 589

وَيَصْلَىٰ سَعِيرًا12

அவன் நரகத்தில் புகுவான்.
84:13ஜுஸ் 30 · ப. 589

إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا13

நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான்.
84:14ஜுஸ் 30 · ப. 589

إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ14

நிச்சயமாக, தான் (இறைவன் பால்) "மீளவே மாட்டேன்" என்று எண்ணியிருந்தான்.
84:15ஜுஸ் 30 · ப. 589

بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا15

அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான்.
84:16ஜுஸ் 30 · ப. 589

فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ16

இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
84:17ஜுஸ் 30 · ப. 589

وَاللَّيْلِ وَمَا وَسَقَ17

மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்,
84:18ஜுஸ் 30 · ப. 589

وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ18

பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்).
84:19ஜுஸ் 30 · ப. 589

لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ19

நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
84:20ஜுஸ் 30 · ப. 589

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ20

எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை.
84:21ஜுஸ் 30 · ப. 589

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩21

மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
84:22ஜுஸ் 30 · ப. 589

بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ22

அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
84:23ஜுஸ் 30 · ப. 589

وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ23

ஆனால் அல்லாஹ், அவர்கள் (தங்களுக்குள்ளே சேகரித்து) மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
84:24ஜுஸ் 30 · ப. 589

فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ24

(நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங் கூறுவீராக.
84:25ஜுஸ் 30 · ப. 590

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ25

எவர்கள் ஈமான்கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு