சூரா 8 · ஜுஸ் 9

Al-Anfal · 8:20

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.

தஃப்சீர்

8.20. அல்லாஹ்வை உண்மைப்படுத்தி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். அவனுடைய வசனங்கள் உங்களிடம் எடுத்துரைக்கப்படுவதை செவியேற்றுக் கொண்டே அவன் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு, அவன் தடுத்துள்ளவற்றைச் செய்து அவனைப் புறக்கணித்துவிடாதீர்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்