சூரா 7 · ஜுஸ் 8
Al-A'raf · 7:66
قَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ إِنَّا لَنَرَاكَ فِي سَفَاهَةٍ وَإِنَّا لَنَظُنُّكَ مِنَ الْكَاذِبِينَ
அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
தஃப்சீர்
7.66. அவரது சமூகத்தில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்த தலைவர்களும் பெரியவர்களும் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி சிலைகளை விட்டு விட வேண்டும் என்று நீர் எங்களை அழைத்த போது நீர் புத்திக் கோளாறு, மடமையிலுமே இருக்கின்றீர் என்பதை நாங்கள் நன்கு அறிந்து கொண்டோம். நீர் தூதர் என்ற வாதத்தில் நீர் பொய்யர் என்பதாகவே நாம் கருதுகின்றோம்.”
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்