சூரா 7 · ஜுஸ் 8
Al-A'raf · 7:64
فَكَذَّبُوهُ فَأَنْجَيْنَاهُ وَالَّذِينَ مَعَهُ فِي الْفُلْكِ وَأَغْرَقْنَا الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا ۚ إِنَّهُمْ كَانُوا قَوْمًا عَمِينَ
அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.
தஃப்சீர்
7.64. அவரது சமூகத்தினர் அவர் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவரை நிராகரித்தனர். மாறாக தங்களின் நிராகரிப்பிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்களை அழித்து விடும்படி அவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார். நாம் அவரையும் அவருடன் கப்பலில் ஏறிய நம்பிக்கையாளர்களையும் மூழ்காது காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்து அதில் நிலைத்திருந்தவர்களை, தண்டிப்பதற்காக இறக்கப்பட்ட வெள்ளத்தினால் மூழ்கடித்து அழித்து விட்டோம். நிச்சயமாக அவர்களின் உள்ளங்கள் சத்தியத்தை விட்டும் குருடாகவே இருந்தன.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்