சூரா 7 · ஜுஸ் 8
Al-A'raf · 7:50
وَنَادَىٰ أَصْحَابُ النَّارِ أَصْحَابَ الْجَنَّةِ أَنْ أَفِيضُوا عَلَيْنَا مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ ۚ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ
நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்" என்று கூறுவார்கள்.
தஃப்சீர்
7.50. நரகவாசிகள் சொர்க்கவாசிகளிடம் கோரிக்கை வைத்தவர்களாகக் கூறுவார்கள்: “சொர்க்கவாசிகளே! எங்கள் மீது நீரை அள்ளி ஊற்றுங்கள். அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து எங்களுக்கும் வழங்குங்கள்.” சொர்க்கவாசிகள் கூறுவார்கள்: “நிராகரிப்பாளர்கள் நிராகரித்த காரணத்தால் அவையிரண்டையும் அவர்கள் மீது அல்லாஹ் தடைசெய்துள்ளான். அவன் உங்கள் மீது தடைசெய்தவற்றின் மூலம் நாங்கள் ஒருபோதும் உங்களுக்கு உதவமாட்டோம்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்