சூரா 6 · ஜுஸ் 7
Al-An'am · 6:35
وَإِنْ كَانَ كَبُرَ عَلَيْكَ إِعْرَاضُهُمْ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَبْتَغِيَ نَفَقًا فِي الْأَرْضِ أَوْ سُلَّمًا فِي السَّمَاءِ فَتَأْتِيَهُمْ بِآيَةٍ ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَمَعَهُمْ عَلَى الْهُدَىٰ ۚ فَلَا تَكُونَنَّ مِنَ الْجَاهِلِينَ
(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
தஃப்சீர்
6.35. தூதுரே! நீர் அவர்களுக்கு கொண்டுவந்த சத்தியத்தில் அவர்களின் நிராகரிப்பும் புறக்கணிப்பும் உமக்குப் பாரமாகத் தோன்றினால் உம்மால் முடிந்தால் பூமியில் ஒரு சுரங்கத்தையோ வானத்தில் ஒரு ஏணியையோ அமைத்து நாம் உமக்கு அளித்த ஆதாரங்கள், சான்றுகள் அல்லாமல் வேறு ஆதாரங்களையோ சான்றுகளையோ கொண்டு வரமுடியுமானால் கொண்டு வாரும். அவர்களுக்கு அல்லாஹ் நீர் கொண்டுவந்த நேர்வழியின் பக்கம் வழிகாட்ட நாடியிருந்தால் அவன் நேர்வழிகாட்டியிருப்பான். ஆயினும் அவன் ஒரு ஆழமான நோக்கத்திற்காக அவ்வாறு விரும்பவில்லை. எனவே அதனைப் புரியாத ஒருவராக நீர் ஆகிவிடாதீர். அதனை நீர் புரியாவிட்டால், அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லையே என்ற கவலையால் உமது உயிரே போய்விடும்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்