சூரா 6 · ஜுஸ் 7
Al-An'am · 6:28
بَلْ بَدَا لَهُمْ مَا كَانُوا يُخْفُونَ مِنْ قَبْلُ ۖ وَلَوْ رُدُّوا لَعَادُوا لِمَا نُهُوا عَنْهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
தஃப்சீர்
6.28. திருப்பி அனுப்பப்பட்டால் நம்பிக்கைகொள்வோம் என அவர்கள் கூறுவது உண்மையல்ல. மாறாக தங்களின் வார்த்தையால் தாங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தி விட்டார்கள். அவர்களது உடலறப்புக்கள் அவர்களுக்கெதிராக சாட்சி கூறும் போது, (நாங்கள் இணைவைப்பாளர்களாக இருக்கவில்லை) என்ற அவர்களின் கூற்றின் மூலம், அவர்கள் மறைத்துக் கொண்டிருந்தவை வெளிவந்துவிட்டன. அவர்கள் உலகிற்கு திருப்பி அனுப்பப்பட்டாலும் தடுக்கப்பட்ட ஷிர்க்கான, நிராகரிப்பான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். நாங்கள் திரும்பினால் நம்பிக்கைகொள்வோம் என்ற தங்களின் வாக்குறுதியில் அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்