சூரா 6 · ஜுஸ் 7

Al-An'am · 6:18

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ

அவனே தன் அடியார்களை அடக்கியாள்பவன், இன்னும் அவனே பூரன ஞானமுள்ளவன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.

தஃப்சீர்

6.18. அவன் தனது அடியார்களை விட மிகைத்தவன். அனைவரையும் அடிபணிய வைப்பவன், அனைத்து வகையிலும் அவர்களை விட உயர்ந்தவன். அவனுக்கு இயலாதது எதுவுமில்லை. அவனை யாராலும் மிகைக்க முடியாது. அனைவரும் அவனுக்குக் கட்டுப்படுபவர்கள்தாம். தன் கண்ணியத்திற்கேற்ப தனது அடியார்களுக்க மேலால் இருக்கிறான். தன் படைப்பிலும் நிர்வாகத்திலும் தான் வழங்கிய சட்டங்களிலும் அவன் ஞானம்மிக்கவன்; அனைத்தையும் அறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்