சூரா 6 · ஜுஸ் 8

Al-An'am · 6:119

وَمَا لَكُمْ أَلَّا تَأْكُلُوا مِمَّا ذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَقَدْ فَصَّلَ لَكُمْ مَا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ ۗ وَإِنَّ كَثِيرًا لَيُضِلُّونَ بِأَهْوَائِهِمْ بِغَيْرِ عِلْمٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِالْمُعْتَدِينَ

அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.

தஃப்சீர்

6.119. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதை உண்பதை விட்டும் எது உங்களைத் தடுக்கிறது. உங்களுக்குத் தடை செய்யப்பட்டவற்றை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவாக்கிவிட்டான். நிர்ப்பந்திக்கப்பட்டாலே தவிர அவற்றை விட்டு விடுவது உங்கள் மீது கடமையாகும். ஏனெனில் நிர்ப்பந்தம் தடை செய்யப்பட்டதை அனுமதிக்கும். இணைவைப்பாளர்களில் பெரும்பாலோர், அறியாமையினால் தங்களின் தவறான கருத்துக்களால் தம்மைப் பின்பற்றுவோரை வழிகெடுக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ் தடை செய்த இறந்தவை போன்றவற்றை அனுமதிக்கிறார்கள். அவன் அனுமதித்த பஹீரா வஸீலா ஹாமீ போன்றவற்றைத் தடைசெய்கிறார்கள். தூதரே! தன் வரம்புகளை மீறக்கூடியவர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்காக அவன் அவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்