சூரா 6 · ஜுஸ் 8

Al-An'am · 6:116

وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ ۚ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ

பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

தஃப்சீர்

6.116. தூதரே! பூமியில் உள்ள பெரும்பான்மையினரை நீர் பின்பற்றினால் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு உம்மை வழிகெடுத்து விடுவார்கள். சத்தியம் குறைவானர்களுடன்தான் இருக்கும் என்பதே அவன் அமைத்த நியதியாகும். மக்களில் பெரும்பாலோர் ஆதாரமற்ற யூகங்களையே பின்பற்றுகிறார்கள். எனவேதான் தங்களின் தெய்வங்கள் தங்களை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் என்று எண்ணுகிறார்கள். இந்த விடயத்தில் அவர்கள் பொய்யையே கூறுகிறார்கள்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்