சூரா 58 · ஜுஸ் 28

Al-Mujadila · 58:12

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً ۚ ذَٰلِكَ خَيْرٌ لَكُمْ وَأَطْهَرُ ۚ فَإِنْ لَمْ تَجِدُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றீராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.

தஃப்சீர்

நபித்தோழர்கள் நபியவர்களுடன் அதிகமாக இரகசியமாக உரையாடிய போது, அல்லாஹ் கூறினான்: 58.12. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நீங்கள் தூதருடன் இரகசியம் பேச விரும்பினால் அதற்கு முன்னால் தர்மம் அளித்துவிடுங்கள். அதில் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் அடங்கியிருப்பதால் அவ்வாறு தர்மம் செய்வது சிறந்ததும் தூய்மையானதுமாகும். தர்மம் செய்ய நீங்கள் எதையும் பெறவில்லையெனில் தூதருடன் இரகசியம் பேசுவதில் எவ்விதக் குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களோடு மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். எனவேதான் அவர்களால் இயன்றதையே அவர்களுக்கு கடமையாக்குகிறான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்