சூரா 57 · ஜுஸ் 27
Al-Hadid · 57:5
لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَإِلَى اللَّهِ تُرْجَعُ الْأُمُورُ
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.
தஃப்சீர்
57.5. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் பக்கம் மட்டுமே விவகாரங்கள் திரும்புகின்றன. அவன் மறுமை நாளில் படைப்புகள் அனைவரையும் விசாரணை செய்வான். அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்