சூரா 55 · ஜுஸ் 27

Ar-Rahman · 55:29

يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ

வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும், (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.

தஃப்சீர்

55.29. வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள மனிதர்கள், ஜின்கள் அனைவரும் தங்களின் தேவைகளை அவனிடமே கேட்கிறார்கள். அவன் ஒவ்வொரு நாளும் தன் அடியார்களின் விவகாரங்களான உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், வாழ்வாதாரம் வழங்குதல், மற்றவிடயங்களில் இருக்கிறான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்