சூரா 4 · ஜுஸ் 5

An-Nisa · 4:85

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا ۖ وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُقِيتًا

எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.

தஃப்சீர்

4.85. பிறருக்கு நன்மை ஏற்படுவதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அதன் நன்மையில் பங்கு உண்டு. பிறருக்கு தீங்கு செய்வதற்காக யார் முயற்சி செய்வாரோ அவருக்கும் அந்தப் பாவத்தில் பங்கு உண்டு. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான். நன்மை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு. தீமை நிகழ்வதற்கு நீங்கள் காரணமாக அமைந்தால் அதில் உங்களுக்கும் பங்கு உண்டு.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்