சூரா 3 · ஜுஸ் 3

Ali 'Imran · 3:20

فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ ۗ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ ۚ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا ۖ وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ ۗ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ

(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக "நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; "நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.

தஃப்சீர்

3.20. தூதரே! உம்மீது இறக்கப்பட்ட சத்தியம் குறித்து அவர்கள் உம்மிடம் விவாதம் செய்தால் அவர்களிடம் கூறிவிடும், “நானும் என்னைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து விட்டோம் என்று.” தூதரே! வேதக்காரர்களிடமும் இணைவைப்பாளர்களிடமும் நீர் கூறுவீராக, “உளத்தூய்மையுடன் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நான் கொண்டு வந்ததை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?” அவர்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு உம்முடைய மார்க்கத்தைப் பின்பற்றினால் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்தால், உமக்கு கட்டளையிடப்பட்டதை எடுத்துரைப்பதைத்தவிர உம்மீது வேறு எந்த கடமையும் இல்லை. அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. அவன் தன் அடியார்களை பார்க்கக்கூடியவன்; அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு கூலி வழங்கக்கூடியவன்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்