சூரா 2 · ஜுஸ் 2

Al-Baqarah · 2:185

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ ۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ۖ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَىٰ سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ ۗ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

தஃப்சீர்

2.185. ரமலான் மாதத்தில் "லைலத்துல் கத்ர்" என்றும் கண்ணியமிக்க இரவில்தான் முஹம்மது நபியின்மீது குர்ஆன் இறங்கத் தொடங்கியது. அல்லாஹ் அதனை மக்களுக்கு வழிகாட்டியாக இறக்கினான். அதில் நேர்வழி மற்றும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிவித்தல் ஆகிய தெளிவான ஆதாரங்களும், உள்ளன. எனவே ரமலான் மாதத்தை அடைபவர் பயணத்தில் அல்லாமல், ஆரோக்கியமாக இருந்தால் அவர்மீது நோன்பு நோற்பது கடமையாகும். உங்களில் நோன்பு நோற்க முடியாத நோயாளியாகவோ பயணியாகவோ இருப்பவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ள வேண்டும். அல்லாஹ் தன்னுடைய சட்டங்களின்மூலம் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். இது ஏனெனில், நீங்கள் நோன்பு மாதத்தின் எண்ணிக்கையை நிறைவுபடுத்துவதற்காகவும், அதன் முடிவில் வருகின்ற பெருநாளில் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கவும் அதனை முழுமைப்படுத்தவும் உதவியமைக்காக அவனைத் தக்பீர் கூறி புகழ்வதற்காகவும் அவன் விரும்பும் மார்க்கத்தின்பால் உங்களுக்கு வழிகாட்டியதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும்தான்.

வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்

உங்கள் மொழியில் தஃப்சீர்

அரபுத் தஃப்சீர்கள்

மொழிபெயர்ப்பு

கேள்