சூரா 16 · ஜுஸ் 14
An-Nahl · 16:108
أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ
அத்தகையோருடைய இதயங்கள், செவிப்புலன், பார்வைகள் (ஆகியவற்றின்) மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள் தான் (தம் இறுதி பற்றி) பராமுக அலட்சியமாகயிருப்பவர்கள்.
தஃப்சீர்
16.108. நம்பிக்கைகொண்ட பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட இவர்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ள முடியாமல் அவர்களின் உள்ளங்களிலும், அவற்றைச் செவியுற்று பயனடைய முடியாமல் செவிகளிலும், ஈமானுக்கான சான்றுகளைக் கண்டுகொள்ள முடியாமல் பார்வைகளிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் பாக்கியம் மற்றும் துர்பாக்கியத்தின் காரணங்களையும் அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள வேதனையையும் அறியாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்