சூரா 10 · ஜுஸ் 11
Yunus · 10:60
وَمَا ظَنُّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّ اللَّهَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ
அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை றாளைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.
தஃப்சீர்
10.60. பொய்யை புனைபவர்கள் மறுமை நாளில் தங்களுக்கு என்ன நிகழும் என்று எண்ணுகிறார்கள்? அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று எண்ணுகிறார்களா? சாத்தியமேயில்லை. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களை உடனுக்குடன் தண்டிக்காமல் அவர்களுக்கு அவகாசம் அளித்து அவர்கள் மீது அருள்புரியக் கூடியவனாவான். ஆயினும் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல் நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்கிறார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்