சூரா 10 · ஜுஸ் 11
Yunus · 10:58
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ
"அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சிடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது" என்று (நபியே!) நீர் கூறும்.
தஃப்சீர்
10.58. தூதரே! நீர் மக்களிடம் கூறுவீராக: “நான் உங்களிடம் கொண்டுவந்துள்ள குர்ஆன், அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த அருளாகவும் கருணையாகவும் இருக்கின்றது. குர்ஆனை உங்களுக்கு இறக்கி அல்லாஹ் உங்கள் மீது புரியும் அருளையும் கருணையையும் கொண்டே நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். வேறொன்றைக் கொண்டுமல்ல. முஹம்மது தம் இறைவனிடமிருந்து அவர்களிடம் கொண்டு வந்தது, அழிந்து விடும் உலகில் அவர்கள் சேர்த்துவைப்பவற்றை விட சிறந்தது.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்