சூரா 10 · ஜுஸ் 11
Yunus · 10:54
وَلَوْ أَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِي الْأَرْضِ لَافْتَدَتْ بِهِ ۗ وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ ۖ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ ۚ وَهُمْ لَا يُظْلَمُونَ
(அந்த நாளின்) வேதனையைக் காணும்போதுகள்ர்ர்கள்ற அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்; தன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்; ஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.
தஃப்சீர்
10.54. அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஒவ்வொருவருக்கும் பூமி நிறைய பெறுமதியான செல்வங்கள் இருந்தாலும், ஈட்டுத் தொகை கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டால் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக அனைத்தையும் ஈடாக அளித்துவிடுவார். மறுமை நாளில் தங்களின் நிராகரிப்பினால் இணைவைப்பாளர்கள் வேதனையைக் காணும் போது கைசேதத்தை மறைத்துக் கொள்வார்கள். அவர்களிடையே அல்லாஹ் நியாயமாகத் தீர்ப்பளிப்பான். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். தங்களின் செயல்களுக்குத்தான் அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.
வாசகரில் திறக்க - முழு சூராவையும் படியுங்கள்