Al-Waqi'ah

سورة الواقعة

சூரா 56 · மக்கிய்யா · 96 வசனங்கள்

56:1ஜுஸ் 27 · ப. 534

إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ1

மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால்
56:2ஜுஸ் 27 · ப. 534

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ2

அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:3ஜுஸ் 27 · ப. 534

خَافِضَةٌ رَافِعَةٌ3

அது (தீயோரைத்) தாழ்த்தி விடும், (நல்லோரை) உயர்த்தி விடும்.
56:4ஜுஸ் 27 · ப. 534

إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا4

பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
56:5ஜுஸ் 27 · ப. 534

وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا5

இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
56:6ஜுஸ் 27 · ப. 534

فَكَانَتْ هَبَاءً مُنْبَثًّا6

பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:7ஜுஸ் 27 · ப. 534

وَكُنْتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً7

(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
56:8ஜுஸ் 27 · ப. 534

فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ8

(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:9ஜுஸ் 27 · ப. 534

وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ9

(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
56:10ஜுஸ் 27 · ப. 534

وَالسَّابِقُونَ السَّابِقُونَ10

(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:11ஜுஸ் 27 · ப. 534

أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ11

இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12ஜுஸ் 27 · ப. 534

فِي جَنَّاتِ النَّعِيمِ12

இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:13ஜுஸ் 27 · ப. 534

ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ13

முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
56:14ஜுஸ் 27 · ப. 534

وَقَلِيلٌ مِنَ الْآخِرِينَ14

பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
56:15ஜுஸ் 27 · ப. 534

عَلَىٰ سُرُرٍ مَوْضُونَةٍ15

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
56:16ஜுஸ் 27 · ப. 534

مُتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ16

ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17ஜுஸ் 27 · ப. 535

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ17

நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
56:18ஜுஸ் 27 · ப. 535

بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِنْ مَعِينٍ18

தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
56:19ஜுஸ் 27 · ப. 535

لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنْزِفُونَ19

(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
56:20ஜுஸ் 27 · ப. 535

وَفَاكِهَةٍ مِمَّا يَتَخَيَّرُونَ20

இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
56:21ஜுஸ் 27 · ப. 535

وَلَحْمِ طَيْرٍ مِمَّا يَشْتَهُونَ21

விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:22ஜுஸ் 27 · ப. 535

وَحُورٌ عِينٌ22

(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
56:23ஜுஸ் 27 · ப. 535

كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ23

மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
56:24ஜுஸ் 27 · ப. 535

جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ24

(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
56:25ஜுஸ் 27 · ப. 535

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا25

அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
56:26ஜுஸ் 27 · ப. 535

إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا26

'ஸலாம், ஸலாம்' என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
56:27ஜுஸ் 27 · ப. 535

وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ27

இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:28ஜுஸ் 27 · ப. 535

فِي سِدْرٍ مَخْضُودٍ28

(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்:
56:29ஜுஸ் 27 · ப. 535

وَطَلْحٍ مَنْضُودٍ29

(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடை வாழை மரத்தின் கீழும்:
56:30ஜுஸ் 27 · ப. 535

وَظِلٍّ مَمْدُودٍ30

இன்னும், நீண்ட நிழலிலும்,
56:31ஜுஸ் 27 · ப. 535

وَمَاءٍ مَسْكُوبٍ31

(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
56:32ஜுஸ் 27 · ப. 535

وَفَاكِهَةٍ كَثِيرَةٍ32

ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
56:33ஜுஸ் 27 · ப. 535

لَا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ33

அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
56:34ஜுஸ் 27 · ப. 535

وَفُرُشٍ مَرْفُوعَةٍ34

மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:35ஜுஸ் 27 · ப. 535

إِنَّا أَنْشَأْنَاهُنَّ إِنْشَاءً35

நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி,
56:36ஜுஸ் 27 · ப. 535

فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا36

அப்பெண்களைக் கன்னிகளாகவும்,
56:37ஜுஸ் 27 · ப. 535

عُرُبًا أَتْرَابًا37

(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:38ஜுஸ் 27 · ப. 535

لِأَصْحَابِ الْيَمِينِ38

வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
56:39ஜுஸ் 27 · ப. 535

ثُلَّةٌ مِنَ الْأَوَّلِينَ39

முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
56:40ஜுஸ் 27 · ப. 535

وَثُلَّةٌ مِنَ الْآخِرِينَ40

பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
56:41ஜுஸ் 27 · ப. 535

وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ41

இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
56:42ஜுஸ் 27 · ப. 535

فِي سَمُومٍ وَحَمِيمٍ42

(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
56:43ஜுஸ் 27 · ப. 535

وَظِلٍّ مِنْ يَحْمُومٍ43

அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:44ஜுஸ் 27 · ப. 535

لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ44

(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
56:45ஜுஸ் 27 · ப. 535

إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ45

நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
56:46ஜுஸ் 27 · ப. 535

وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ46

ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
56:47ஜுஸ் 27 · ப. 535

وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ47

மேலும், அவர்கள், "நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?" என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
56:48ஜுஸ் 27 · ப. 535

أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ48

"அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?" என்றும் கூறினர்.)
56:49ஜுஸ் 27 · ப. 535

قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ49

(நபியே!) நீர் கூறும்: "(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
56:50ஜுஸ் 27 · ப. 535

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَعْلُومٍ50

"குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
56:51ஜுஸ் 27 · ப. 536

ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ51

அதற்குப் பின்னர்: "பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:52ஜுஸ் 27 · ப. 536

لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ52

ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
56:53ஜுஸ் 27 · ப. 536

فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ53

ஆகவே, "அதைக் கொண்டே வயிறுகளை நிரப்புவீர்கள்.
56:54ஜுஸ் 27 · ப. 536

فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ54

அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
56:55ஜுஸ் 27 · ப. 536

فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ55

"பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."
56:56ஜுஸ் 27 · ப. 536

هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ56

இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
56:57ஜுஸ் 27 · ப. 536

نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ57

நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58ஜுஸ் 27 · ப. 536

أَفَرَأَيْتُمْ مَا تُمْنُونَ58

(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59ஜுஸ் 27 · ப. 536

أَأَنْتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ59

அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
56:60ஜுஸ் 27 · ப. 536

نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ60

உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
56:61ஜுஸ் 27 · ப. 536

عَلَىٰ أَنْ نُبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنْشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ61

(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
56:62ஜுஸ் 27 · ப. 536

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ62

முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
56:63ஜுஸ் 27 · ப. 536

أَفَرَأَيْتُمْ مَا تَحْرُثُونَ63

(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
56:64ஜுஸ் 27 · ப. 536

أَأَنْتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ64

அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
56:65ஜுஸ் 27 · ப. 536

لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ65

நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
56:66ஜுஸ் 27 · ப. 536

إِنَّا لَمُغْرَمُونَ66

"நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
56:67ஜுஸ் 27 · ப. 536

بَلْ نَحْنُ مَحْرُومُونَ67

"மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்" (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:68ஜுஸ் 27 · ப. 536

أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ68

அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
56:69ஜுஸ் 27 · ப. 536

أَأَنْتُمْ أَنْزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنْزِلُونَ69

மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
56:70ஜுஸ் 27 · ப. 536

لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ70

நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:71ஜுஸ் 27 · ப. 536

أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ71

நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:72ஜுஸ் 27 · ப. 536

أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنْشِئُونَ72

அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
56:73ஜுஸ் 27 · ப. 536

نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِلْمُقْوِينَ73

நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு பயனளிக்கப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
56:74ஜுஸ் 27 · ப. 536

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ74

ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
56:75ஜுஸ் 27 · ப. 536

۞ فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ75

நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
56:76ஜுஸ் 27 · ப. 536

وَإِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظِيمٌ76

நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான் பிரமாணமாகும்.
56:77ஜுஸ் 27 · ப. 537

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ77

நீச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:78ஜுஸ் 27 · ப. 537

فِي كِتَابٍ مَكْنُونٍ78

பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ79

தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
56:80ஜுஸ் 27 · ப. 537

تَنْزِيلٌ مِنْ رَبِّ الْعَالَمِينَ80

அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:81ஜுஸ் 27 · ப. 537

أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنْتُمْ مُدْهِنُونَ81

அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
56:82ஜுஸ் 27 · ப. 537

وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ82

நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
56:83ஜுஸ் 27 · ப. 537

فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ83

மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
56:84ஜுஸ் 27 · ப. 537

وَأَنْتُمْ حِينَئِذٍ تَنْظُرُونَ84

அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
56:85ஜுஸ் 27 · ப. 537

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْكُمْ وَلَٰكِنْ لَا تُبْصِرُونَ85

ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
56:86ஜுஸ் 27 · ப. 537

فَلَوْلَا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِينَ86

எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
56:87ஜுஸ் 27 · ப. 537

تَرْجِعُونَهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ87

நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
56:88ஜுஸ் 27 · ப. 537

فَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُقَرَّبِينَ88

(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
56:89ஜுஸ் 27 · ப. 537

فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ89

அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
56:90ஜுஸ் 27 · ப. 537

وَأَمَّا إِنْ كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ90

அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
56:91ஜுஸ் 27 · ப. 537

فَسَلَامٌ لَكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ91

"வலப்புறத்தோரே! உங்களுக்கு "ஸலாம்" உண்டாவதாக" (என்று கூறப்படும்).
56:92ஜுஸ் 27 · ப. 537

وَأَمَّا إِنْ كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ92

ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
56:93ஜுஸ் 27 · ப. 537

فَنُزُلٌ مِنْ حَمِيمٍ93

கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
56:94ஜுஸ் 27 · ப. 537

وَتَصْلِيَةُ جَحِيمٍ94

நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
56:95ஜுஸ் 27 · ப. 537

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ95

நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:96ஜுஸ் 27 · ப. 537

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ96

எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Salah Bukhatir - Al-Waqi'ah · Tlawati