Al-Adiyat

سورة العاديات

சூரா 100 · மக்கிய்யா · 11 வசனங்கள்

100:1ஜுஸ் 30 · ப. 599

وَالْعَادِيَاتِ ضَبْحًا1

மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:2ஜுஸ் 30 · ப. 599

فَالْمُورِيَاتِ قَدْحًا2

பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
100:3ஜுஸ் 30 · ப. 599

فَالْمُغِيرَاتِ صُبْحًا3

பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
100:4ஜுஸ் 30 · ப. 599

فَأَثَرْنَ بِهِ نَقْعًا4

மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
100:5ஜுஸ் 30 · ப. 599

فَوَسَطْنَ بِهِ جَمْعًا5

அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
100:6ஜுஸ் 30 · ப. 600

إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ6

நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:7ஜுஸ் 30 · ப. 600

وَإِنَّهُ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ7

அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:8ஜுஸ் 30 · ப. 600

وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ8

இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
100:9ஜுஸ் 30 · ப. 600

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ9

அவன் அறிந்து கொள்ளவில்லையா? கப்றுகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
100:10ஜுஸ் 30 · ப. 600

وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ10

மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
100:11ஜுஸ் 30 · ப. 600

إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ11

நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Jibreel - Al-Adiyat · Tlawati