Al-Fatihah

سورة الفاتحة

சூரா 1 · மக்கிய்யா · 7 வசனங்கள்

1:1 · Al-Fatihahஜுஸ் 1 · ப. 1

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ1

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்! (தொடங்குகிறேன்).
1:2ஜுஸ் 1 · ப. 1

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ2

அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3ஜுஸ் 1 · ப. 1

الرَّحْمَٰنِ الرَّحِيمِ3

(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
1:4ஜுஸ் 1 · ப. 1

مَالِكِ يَوْمِ الدِّينِ4

(அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5ஜுஸ் 1 · ப. 1

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ5

(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6ஜுஸ் 1 · ப. 1

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ6

நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!
1:7ஜுஸ் 1 · ப. 1

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ7

(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி, (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Jibreel - Al-Fatihah · Tlawati