Al-Alaq

سورة العلق

சூரா 96 · மக்கிய்யா · 19 வசனங்கள்

96:1ஜுஸ் 30 · ப. 597

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ1

(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
96:2ஜுஸ் 30 · ப. 597

خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ2

'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
96:3ஜுஸ் 30 · ப. 597

اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ3

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
96:4ஜுஸ் 30 · ப. 597

الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ4

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
96:5ஜுஸ் 30 · ப. 597

عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ5

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
96:6ஜுஸ் 30 · ப. 597

كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ6

எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
96:7ஜுஸ் 30 · ப. 597

أَنْ رَآهُ اسْتَغْنَىٰ7

அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
96:8ஜுஸ் 30 · ப. 597

إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ8

நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
96:9ஜுஸ் 30 · ப. 597

أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ9

தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
96:10ஜுஸ் 30 · ப. 597

عَبْدًا إِذَا صَلَّىٰ10

ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
96:11ஜுஸ் 30 · ப. 597

أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ11

நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
96:12ஜுஸ் 30 · ப. 597

أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ12

அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
96:13ஜுஸ் 30 · ப. 598

أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ13

அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
96:14ஜுஸ் 30 · ப. 598

أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ14

நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15ஜுஸ் 30 · ப. 598

كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ15

அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
96:16ஜுஸ் 30 · ப. 598

نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ16

தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
96:17ஜுஸ் 30 · ப. 598

فَلْيَدْعُ نَادِيَهُ17

ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
96:18ஜுஸ் 30 · ப. 598

سَنَدْعُ الزَّبَانِيَةَ18

நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
96:19ஜுஸ் 30 · ப. 598

كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩19

(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Ayyub - Al-Alaq · Tlawati