Al-Humazah

سورة الهمزة

சூரா 104 · மக்கிய்யா · 9 வசனங்கள்

104:1ஜுஸ் 30 · ப. 601

وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ1

குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.
104:2ஜுஸ் 30 · ப. 601

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ2

(அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான்.
104:3ஜுஸ் 30 · ப. 601

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ3

நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான்.
104:4ஜுஸ் 30 · ப. 601

كَلَّا ۖ لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ4

அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான்.
104:5ஜுஸ் 30 · ப. 601

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ5

ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
104:6ஜுஸ் 30 · ப. 601

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ6

அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
104:7ஜுஸ் 30 · ப. 601

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ7

அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்.
104:8ஜுஸ் 30 · ப. 601

إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ8

நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும்.
104:9ஜுஸ் 30 · ப. 601

فِي عَمَدٍ مُمَدَّدَةٍ9

நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக).

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Ayyub - Al-Humazah · Tlawati