An-Nazi'at

سورة النازعات

சூரா 79 · மக்கிய்யா · 46 வசனங்கள்

79:1ஜுஸ் 30 · ப. 583

وَالنَّازِعَاتِ غَرْقًا1

(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:2ஜுஸ் 30 · ப. 583

وَالنَّاشِطَاتِ نَشْطًا2

(நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:3ஜுஸ் 30 · ப. 583

وَالسَّابِحَاتِ سَبْحًا3

வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:4ஜுஸ் 30 · ப. 583

فَالسَّابِقَاتِ سَبْقًا4

முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:5ஜுஸ் 30 · ப. 583

فَالْمُدَبِّرَاتِ أَمْرًا5

ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:6ஜுஸ் 30 · ப. 583

يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ6

பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;
79:7ஜுஸ் 30 · ப. 583

تَتْبَعُهَا الرَّادِفَةُ7

அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
79:8ஜுஸ் 30 · ப. 583

قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ8

அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
79:9ஜுஸ் 30 · ப. 583

أَبْصَارُهَا خَاشِعَةٌ9

அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
79:10ஜுஸ் 30 · ப. 583

يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ10

"நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?" என்று கூறுகிறார்கள்.
79:11ஜுஸ் 30 · ப. 583

أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً11

"மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"
79:12ஜுஸ் 30 · ப. 583

قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ12

"அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்" என்றும் கூறுகின்றார்கள்.
79:13ஜுஸ் 30 · ப. 583

فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ13

ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
79:14ஜுஸ் 30 · ப. 583

فَإِذَا هُمْ بِالسَّاهِرَةِ14

அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
79:15ஜுஸ் 30 · ப. 583

هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ15

(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
79:16ஜுஸ் 30 · ப. 583

إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى16

'துவா' என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
79:17ஜுஸ் 30 · ப. 584

اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ17

"நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."
79:18ஜுஸ் 30 · ப. 584

فَقُلْ هَلْ لَكَ إِلَىٰ أَنْ تَزَكَّىٰ18

இன்னும் (ஃபிர்அவ்னிடம்; "பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?" என்று கேளும்.
79:19ஜுஸ் 30 · ப. 584

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ19

"அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
79:20ஜுஸ் 30 · ப. 584

فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ20

ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
79:21ஜுஸ் 30 · ப. 584

فَكَذَّبَ وَعَصَىٰ21

ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
79:22ஜுஸ் 30 · ப. 584

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ22

பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
79:23ஜுஸ் 30 · ப. 584

فَحَشَرَ فَنَادَىٰ23

அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
79:24ஜுஸ் 30 · ப. 584

فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ24

"நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா" என்று (அவர்களிடம்) கூறினான்.
79:25ஜுஸ் 30 · ப. 584

فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ25

இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
79:26ஜுஸ் 30 · ப. 584

إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِمَنْ يَخْشَىٰ26

நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.
79:27ஜுஸ் 30 · ப. 584

أَأَنْتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا27

உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
79:28ஜுஸ் 30 · ப. 584

رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا28

அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
79:29ஜுஸ் 30 · ப. 584

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا29

அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான்.
79:30ஜுஸ் 30 · ப. 584

وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا30

இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
79:31ஜுஸ் 30 · ப. 584

أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا31

அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:32ஜுஸ் 30 · ப. 584

وَالْجِبَالَ أَرْسَاهَا32

அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
79:33ஜுஸ் 30 · ப. 584

مَتَاعًا لَكُمْ وَلِأَنْعَامِكُمْ33

உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
79:34ஜுஸ் 30 · ப. 584

فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ34

எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
79:35ஜுஸ் 30 · ப. 584

يَوْمَ يَتَذَكَّرُ الْإِنْسَانُ مَا سَعَىٰ35

அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
79:36ஜுஸ் 30 · ப. 584

وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَنْ يَرَىٰ36

அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37ஜுஸ் 30 · ப. 584

فَأَمَّا مَنْ طَغَىٰ37

எனவே, எவன் வரம்பை மீறினானோ -
79:38ஜுஸ் 30 · ப. 584

وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا38

இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
79:39ஜுஸ் 30 · ப. 584

فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ39

அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
79:40ஜுஸ் 30 · ப. 584

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ40

எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
79:41ஜுஸ் 30 · ப. 584

فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ41

நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
79:42ஜுஸ் 30 · ப. 584

يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا42

(நபியே! "மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?" என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
79:43ஜுஸ் 30 · ப. 584

فِيمَ أَنْتَ مِنْ ذِكْرَاهَا43

அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
79:44ஜுஸ் 30 · ப. 584

إِلَىٰ رَبِّكَ مُنْتَهَاهَا44

அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
79:45ஜுஸ் 30 · ப. 584

إِنَّمَا أَنْتَ مُنْذِرُ مَنْ يَخْشَاهَا45

அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
79:46ஜுஸ் 30 · ப. 584

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا46

நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Muhammad Abdulkarim - An-Nazi'at · Tlawati