Al-Qiyamah

سورة القيامة

சூரா 75 · மக்கிய்யா · 40 வசனங்கள்

75:1ஜுஸ் 29 · ப. 577

لَا أُقْسِمُ بِيَوْمِ الْقِيَامَةِ1

கியாம நாளின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
75:2ஜுஸ் 29 · ப. 577

وَلَا أُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ2

நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
75:3ஜுஸ் 29 · ப. 577

أَيَحْسَبُ الْإِنْسَانُ أَلَّنْ نَجْمَعَ عِظَامَهُ3

(மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா?
75:4ஜுஸ் 29 · ப. 577

بَلَىٰ قَادِرِينَ عَلَىٰ أَنْ نُسَوِّيَ بَنَانَهُ4

அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
75:5ஜுஸ் 29 · ப. 577

بَلْ يُرِيدُ الْإِنْسَانُ لِيَفْجُرَ أَمَامَهُ5

எனினும் மனிதன் தன் எதிரே வர விருப்பதை (கியாம நாள்) பொய்ப்பிக்கவே நாடுகிறான்.
75:6ஜுஸ் 29 · ப. 577

يَسْأَلُ أَيَّانَ يَوْمُ الْقِيَامَةِ6

"கியாம நாள் எப்போழுது வரும்?" என்று (ஏளனமாகக்) கேட்கிறான்.
75:7ஜுஸ் 29 · ப. 577

فَإِذَا بَرِقَ الْبَصَرُ7

ஆகவே, பார்வையும் மழுங்கி-
75:8ஜுஸ் 29 · ப. 577

وَخَسَفَ الْقَمَرُ8

சந்திரன் ஒளியும் மங்கி-
75:9ஜுஸ் 29 · ப. 577

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ9

சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.
75:10ஜுஸ் 29 · ப. 577

يَقُولُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُّ10

அந்நாளில் "(தப்பித்துக் கெள; ள) எங்கு விரண்டோடுவது?" என்று மனிதன் கேட்பான்.
75:11ஜுஸ் 29 · ப. 577

كَلَّا لَا وَزَرَ11

"இல்லை, இல்லை! தப்ப இடமேயில்லை!" (என்று கூறப்படும்).
75:12ஜுஸ் 29 · ப. 577

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمُسْتَقَرُّ12

அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு.
75:13ஜுஸ் 29 · ப. 577

يُنَبَّأُ الْإِنْسَانُ يَوْمَئِذٍ بِمَا قَدَّمَ وَأَخَّرَ13

அந்நாளில், மனிதன் முற்படுத்தி (அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்ததையும் பற்றி அறிவிக்கப்படுவான்.
75:14ஜுஸ் 29 · ப. 577

بَلِ الْإِنْسَانُ عَلَىٰ نَفْسِهِ بَصِيرَةٌ14

எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான்.
75:15ஜுஸ் 29 · ப. 577

وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُ15

அவன் தன்(பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்ட போதிலும்!
75:16ஜுஸ் 29 · ப. 577

لَا تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ16

(நபியே!) அவசரப்பட்டு அதற்காக (குர்ஆனை ஓதவதற்காக) உம் நாவை அசைக்காதீர்கள்.
75:17ஜுஸ் 29 · ப. 577

إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ17

நிச்சயமாக அதனை (குர்ஆனை) ஒன்று சேர்ப்பதும், (நீர்) அதை ஓதும்படிச் செய்வதும் நம் மீதே உள்ளன.
75:18ஜுஸ் 29 · ப. 577

فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ18

எனவே (ஜிப்ரயீலின் வாயிலாக), அதனை நாம் ஓதி விட்டோமாயின், அப்பால், அதன் ஓதுதலை பின் தொடர்ந்து (ஓதிக்) கொள்ளுங்கள்.
75:19ஜுஸ் 29 · ப. 577

ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ19

பின்னர், அதனை விளக்குவது நிச்சயமாக நம்மீதே உள்ளது.
75:20ஜுஸ் 29 · ப. 578

كَلَّا بَلْ تُحِبُّونَ الْعَاجِلَةَ20

எனினும் (மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அவசரப்படுவதையே பிரியப்படுகிறீர்கள்.
75:21ஜுஸ் 29 · ப. 578

وَتَذَرُونَ الْآخِرَةَ21

ஆகவேதான் (இம்மையைப் பற்றிக் கொண்டு) மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22ஜுஸ் 29 · ப. 578

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ22

அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியால்) செழுமையாக இருக்கும்.
75:23ஜுஸ் 29 · ப. 578

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ23

தம்முடைய இறைவனளவில் நோக்கிய வையாக இருக்கும்.
75:24ஜுஸ் 29 · ப. 578

وَوُجُوهٌ يَوْمَئِذٍ بَاسِرَةٌ24

ஆனால், அந்நாளில் வேறு சில முகங்களோ (துக்கத்தால்) சுண்டியிருக்கும்.
75:25ஜுஸ் 29 · ப. 578

تَظُنُّ أَنْ يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ25

இடுப்பை ஒடிக்கும் ஒரு பேராபத்து தம்மீது ஏற்படப் போவதாக அவை உறுதி கொண்டிருக்கும்.
75:26ஜுஸ் 29 · ப. 578

كَلَّا إِذَا بَلَغَتِ التَّرَاقِيَ26

அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால்,
75:27ஜுஸ் 29 · ப. 578

وَقِيلَ مَنْ ۜ رَاقٍ27

"மந்திரிப்பவன் யார்?" எனக் கேட்கப்படுகிறது.
75:28ஜுஸ் 29 · ப. 578

وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ28

ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான்.
75:29ஜுஸ் 29 · ப. 578

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ29

இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும்.
75:30ஜுஸ் 29 · ப. 578

إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقُ30

உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது.
75:31ஜுஸ் 29 · ப. 578

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ31

ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை.
75:32ஜுஸ் 29 · ப. 578

وَلَٰكِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ32

ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான்.
75:33ஜுஸ் 29 · ப. 578

ثُمَّ ذَهَبَ إِلَىٰ أَهْلِهِ يَتَمَطَّىٰ33

பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் - மமதையோடு சென்று விட்டான்.
75:34ஜுஸ் 29 · ப. 578

أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ34

கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்!
75:35ஜுஸ் 29 · ப. 578

ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ35

பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான்.
75:36ஜுஸ் 29 · ப. 578

أَيَحْسَبُ الْإِنْسَانُ أَنْ يُتْرَكَ سُدًى36

வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா?
75:37ஜுஸ் 29 · ப. 578

أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَىٰ37

(கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
75:38ஜுஸ் 29 · ப. 578

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ38

பின்னர் அவன் 'அலக்' என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.
75:39ஜுஸ் 29 · ப. 578

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَىٰ39

பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.
75:40ஜுஸ் 29 · ப. 578

أَلَيْسَ ذَٰلِكَ بِقَادِرٍ عَلَىٰ أَنْ يُحْيِيَ الْمَوْتَىٰ40

(இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா?

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு