Al-Ghashiyah

سورة الغاشية

சூரா 88 · மக்கிய்யா · 26 வசனங்கள்

88:1ஜுஸ் 30 · ப. 592

هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ1

சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:2ஜுஸ் 30 · ப. 592

وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ2

அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:3ஜுஸ் 30 · ப. 592

عَامِلَةٌ نَاصِبَةٌ3

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:4ஜுஸ் 30 · ப. 592

تَصْلَىٰ نَارًا حَامِيَةً4

கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
88:5ஜுஸ் 30 · ப. 592

تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ5

கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
88:6ஜுஸ் 30 · ப. 592

لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِنْ ضَرِيعٍ6

அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
88:7ஜுஸ் 30 · ப. 592

لَا يُسْمِنُ وَلَا يُغْنِي مِنْ جُوعٍ7

அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
88:8ஜுஸ் 30 · ப. 592

وُجُوهٌ يَوْمَئِذٍ نَاعِمَةٌ8

அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:9ஜுஸ் 30 · ப. 592

لِسَعْيِهَا رَاضِيَةٌ9

தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:10ஜுஸ் 30 · ப. 592

فِي جَنَّةٍ عَالِيَةٍ10

உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
88:11ஜுஸ் 30 · ப. 592

لَا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً11

அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
88:12ஜுஸ் 30 · ப. 592

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ12

அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:13ஜுஸ் 30 · ப. 592

فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ13

அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:14ஜுஸ் 30 · ப. 592

وَأَكْوَابٌ مَوْضُوعَةٌ14

(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:15ஜுஸ் 30 · ப. 592

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ15

மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:16ஜுஸ் 30 · ப. 592

وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ16

விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:17ஜுஸ் 30 · ப. 592

أَفَلَا يَنْظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ17

(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18ஜுஸ் 30 · ப. 592

وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ18

மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19ஜுஸ் 30 · ப. 592

وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ19

இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20ஜுஸ் 30 · ப. 592

وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ20

இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:21ஜுஸ் 30 · ப. 592

فَذَكِّرْ إِنَّمَا أَنْتَ مُذَكِّرٌ21

ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
88:22ஜுஸ் 30 · ப. 592

لَسْتَ عَلَيْهِمْ بِمُصَيْطِرٍ22

அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
88:23ஜுஸ் 30 · ப. 593

إِلَّا مَنْ تَوَلَّىٰ وَكَفَرَ23

ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
88:24ஜுஸ் 30 · ப. 593

فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ24

அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
88:25ஜுஸ் 30 · ப. 593

إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ25

நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
88:26ஜுஸ் 30 · ப. 593

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ26

பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு