Az-Zalzalah

سورة الزلزلة

சூரா 99 · மதனிய்யா · 8 வசனங்கள்

99:1ஜுஸ் 30 · ப. 599

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا1

பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது
99:2ஜுஸ் 30 · ப. 599

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا2

இன்னும், பூமி தன் சுமைகளை வெளிப்படுத்தும் போது-
99:3ஜுஸ் 30 · ப. 599

وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا3

"அதற்கு என்ன நேர்ந்தது?" என்று மனிதன் கேட்கும் போது-
99:4ஜுஸ் 30 · ப. 599

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا4

அந்நாளில், அது தன் செய்திகளை அறிவிக்கும்.
99:5ஜுஸ் 30 · ப. 599

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا5

(அவ்வாறு அறிவிக்குமாறு) உம்முடைய இறைவன் அதற்கு வஹீ மூலம் அறித்ததனால்.
99:6ஜுஸ் 30 · ப. 599

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ6

அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள்.
99:7ஜுஸ் 30 · ப. 599

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ7

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8ஜுஸ் 30 · ப. 599

وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ8

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு