وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ1
Al-Layl
سورة الليل
சூரா 92 · மக்கிய்யா · 21 வசனங்கள்
92:1ஜுஸ் 30 · ப. 595
(இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக
92:2ஜுஸ் 30 · ப. 595
وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ2
பிரகாசம் வெளிப்படும் பகலின் மீதும் சத்தியமாக-
92:3ஜுஸ் 30 · ப. 595
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَىٰ3
ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
92:4ஜுஸ் 30 · ப. 595
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ4
நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்.
92:5ஜுஸ் 30 · ப. 595
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَاتَّقَىٰ5
எனவே எவர் (தானதருமம்) கொடுத்து, (தன் இறைவனிடம்) பயபக்தியுடன் நடந்து,
92:6ஜுஸ் 30 · ப. 595
وَصَدَّقَ بِالْحُسْنَىٰ6
நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,
92:7ஜுஸ் 30 · ப. 595
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَىٰ7
அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்.
92:8ஜுஸ் 30 · ப. 595
وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَىٰ8
ஆனால் எவன் உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ,
92:9ஜுஸ் 30 · ப. 595
وَكَذَّبَ بِالْحُسْنَىٰ9
இன்னும், நல்லவற்றை பொய்யாக்குகிறானோ,
92:10ஜுஸ் 30 · ப. 596
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَىٰ10
அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்) வழியைத் தான் இலேசாக்குவோம்.
92:11ஜுஸ் 30 · ப. 596
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّىٰ11
ஆகவே அவன் (நரகத்தில்) விழுந்து விட்டால் அவனுடைய பொருள் அவனுக்குப் பலன் அளிக்காது.
92:12ஜுஸ் 30 · ப. 596
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ12
நேர் வழியைக் காண்பித்தல் நிச்சயமாக நம் மீது இருக்கிறது.
92:13ஜுஸ் 30 · ப. 596
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَىٰ13
அன்றியும் பிந்தியதும் (மறுமையும்) முந்தியதும் (இம்மையும்) நம்முடையவையே ஆகும்.
92:14ஜுஸ் 30 · ப. 596
فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ14
ஆதலின், கொழுந்துவிட்டெறியும் (நரக) நெருப்பைப்பற்றி நான் உங்களை அச்சமூட்டி எச்சரிக்கிறேன்.
92:15ஜுஸ் 30 · ப. 596
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى15
மிக்க துர்ப்பாக்கியமுள்ளவனைத் தவிர (வேறு) எவனும் அதில் புகமாட்டான்.
92:16ஜுஸ் 30 · ப. 596
الَّذِي كَذَّبَ وَتَوَلَّىٰ16
எத்தகையவனென்றால் அவன் (நம் வசனங்களைப்) பொய்யாக்கி, முகம் திரும்பினான்.
92:17ஜுஸ் 30 · ப. 596
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى17
ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தொலைவிலாக்கப்படுவார்.
92:18ஜுஸ் 30 · ப. 596
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّىٰ18
(அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார்.
92:19ஜுஸ் 30 · ப. 596
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَىٰ19
மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும்.
92:20ஜுஸ் 30 · ப. 596
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَىٰ20
மகா மேலான தம் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்).
92:21ஜுஸ் 30 · ப. 596
وَلَسَوْفَ يَرْضَىٰ21
வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார்.