An-Naba

سورة النبأ

சூரா 78 · மக்கிய்யா · 40 வசனங்கள்

78:1ஜுஸ் 30 · ப. 582

عَمَّ يَتَسَاءَلُونَ1

எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2ஜுஸ் 30 · ப. 582

عَنِ النَّبَإِ الْعَظِيمِ2

மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3ஜுஸ் 30 · ப. 582

الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ3

எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
78:4ஜுஸ் 30 · ப. 582

كَلَّا سَيَعْلَمُونَ4

அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5ஜுஸ் 30 · ப. 582

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ5

பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6ஜுஸ் 30 · ப. 582

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا6

நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7ஜுஸ் 30 · ப. 582

وَالْجِبَالَ أَوْتَادًا7

இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8ஜுஸ் 30 · ப. 582

وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا8

இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9ஜுஸ் 30 · ப. 582

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا9

மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10ஜுஸ் 30 · ப. 582

وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا10

அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11ஜுஸ் 30 · ப. 582

وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا11

மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
78:12ஜுஸ் 30 · ப. 582

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا12

உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13ஜுஸ் 30 · ப. 582

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا13

ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14ஜுஸ் 30 · ப. 582

وَأَنْزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا14

அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்.
78:15ஜுஸ் 30 · ப. 582

لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا15

அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக.
78:16ஜுஸ் 30 · ப. 582

وَجَنَّاتٍ أَلْفَافًا16

(கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக).
78:17ஜுஸ் 30 · ப. 582

إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا17

நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
78:18ஜுஸ் 30 · ப. 582

يَوْمَ يُنْفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا18

ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்.
78:19ஜுஸ் 30 · ப. 582

وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا19

இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும்.
78:20ஜுஸ் 30 · ப. 582

وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا20

மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
78:21ஜுஸ் 30 · ப. 582

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا21

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
78:22ஜுஸ் 30 · ப. 582

لِلطَّاغِينَ مَآبًا22

வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக.
78:23ஜுஸ் 30 · ப. 582

لَابِثِينَ فِيهَا أَحْقَابًا23

அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில்.
78:24ஜுஸ் 30 · ப. 582

لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا24

அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்.
78:25ஜுஸ் 30 · ப. 582

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا25

கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.
78:26ஜுஸ் 30 · ப. 582

جَزَاءً وِفَاقًا26

(அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
78:27ஜுஸ் 30 · ப. 582

إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا27

நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர்.
78:28ஜுஸ் 30 · ப. 582

وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا28

அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள்.
78:29ஜுஸ் 30 · ப. 582

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا29

நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம்.
78:30ஜுஸ் 30 · ப. 582

فَذُوقُوا فَلَنْ نَزِيدَكُمْ إِلَّا عَذَابًا30

"ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
78:31ஜுஸ் 30 · ப. 583

إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا31

நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:32ஜுஸ் 30 · ப. 583

حَدَائِقَ وَأَعْنَابًا32

தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:33ஜுஸ் 30 · ப. 583

وَكَوَاعِبَ أَتْرَابًا33

ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:34ஜுஸ் 30 · ப. 583

وَكَأْسًا دِهَاقًا34

பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:35ஜுஸ் 30 · ப. 583

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا35

அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள்.
78:36ஜுஸ் 30 · ப. 583

جَزَاءً مِنْ رَبِّكَ عَطَاءً حِسَابًا36

(இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.
78:37ஜுஸ் 30 · ப. 583

رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمَٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا37

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள்.
78:38ஜுஸ் 30 · ப. 583

يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا ۖ لَا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا38

ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார்.
78:39ஜுஸ் 30 · ப. 583

ذَٰلِكَ الْيَوْمُ الْحَقُّ ۖ فَمَنْ شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ مَآبًا39

அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக.
78:40ஜுஸ் 30 · ப. 583

إِنَّا أَنْذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنْتُ تُرَابًا40

நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் "அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!" என்று (பிரலாபித்துக்) கூறுவான்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு