Ash-Shams

سورة الشمس

சூரா 91 · மக்கிய்யா · 15 வசனங்கள்

91:1ஜுஸ் 30 · ப. 595

وَالشَّمْسِ وَضُحَاهَا1

சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக
91:2ஜுஸ் 30 · ப. 595

وَالْقَمَرِ إِذَا تَلَاهَا2

(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:3ஜுஸ் 30 · ப. 595

وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا3

(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:4ஜுஸ் 30 · ப. 595

وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا4

(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5ஜுஸ் 30 · ப. 595

وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا5

வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6ஜுஸ் 30 · ப. 595

وَالْأَرْضِ وَمَا طَحَاهَا6

பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7ஜுஸ் 30 · ப. 595

وَنَفْسٍ وَمَا سَوَّاهَا7

ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:8ஜுஸ் 30 · ப. 595

فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا8

அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:9ஜுஸ் 30 · ப. 595

قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا9

அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:10ஜுஸ் 30 · ப. 595

وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا10

ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:11ஜுஸ் 30 · ப. 595

كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا11

'ஸமூது' (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:12ஜுஸ் 30 · ப. 595

إِذِ انْبَعَثَ أَشْقَاهَا12

அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
91:13ஜுஸ் 30 · ப. 595

فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا13

அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: "இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்" என்று கூறினார்.
91:14ஜுஸ் 30 · ப. 595

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا14

ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
91:15ஜுஸ் 30 · ப. 595

وَلَا يَخَافُ عُقْبَاهَا15

அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Ahmad Nainaa - Ash-Shams · Tlawati