Al-Muddaththir

سورة المدثر

சூரா 74 · மக்கிய்யா · 56 வசனங்கள்

74:1ஜுஸ் 29 · ப. 575

يَا أَيُّهَا الْمُدَّثِّرُ1

(போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:2ஜுஸ் 29 · ப. 575

قُمْ فَأَنْذِرْ2

நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:3ஜுஸ் 29 · ப. 575

وَرَبَّكَ فَكَبِّرْ3

மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
74:4ஜுஸ் 29 · ப. 575

وَثِيَابَكَ فَطَهِّرْ4

உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.
74:5ஜுஸ் 29 · ப. 575

وَالرُّجْزَ فَاهْجُرْ5

அன்றியும் அசுத்தத்தை வெறுத்து (ஒதுக்கி) விடுவீராக.
74:6ஜுஸ் 29 · ப. 575

وَلَا تَمْنُنْ تَسْتَكْثِرُ6

(பிறருக்குக் கொடுப்பதையும் விட அவர்களிடமிருந்து) அதிமாகப் பொறும் (நோக்கோடு) உபகாரம் செய்யாதீர்.
74:7ஜுஸ் 29 · ப. 575

وَلِرَبِّكَ فَاصْبِرْ7

இன்னும், உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.
74:8ஜுஸ் 29 · ப. 575

فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ8

மேலும், எக்காளத்தில் ஊதப்படும்போது-
74:9ஜுஸ் 29 · ப. 575

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ9

அந்நாள் மிகக் கடினமான நாள் ஆகும்.
74:10ஜுஸ் 29 · ப. 575

عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ10

காஃபிர்களுக்கு (அந்நாள்) இலேசானதல்ல.
74:11ஜுஸ் 29 · ப. 575

ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا11

என்னையும், நான் தனித்தே படைத்தவனையும் விட்டுவிடும்.
74:12ஜுஸ் 29 · ப. 575

وَجَعَلْتُ لَهُ مَالًا مَمْدُودًا12

இன்னும் அவனுக்கு விசாலமாகப் பொருளையும் கொடுத்தேன்.
74:13ஜுஸ் 29 · ப. 575

وَبَنِينَ شُهُودًا13

அவனிடம் இருக்கிறவர்களாகவுள்ள புதல்வர்களையும் (கொடுத்தேன்).
74:14ஜுஸ் 29 · ப. 575

وَمَهَّدْتُ لَهُ تَمْهِيدًا14

இன்னும் அவனுக்கு (வசதியான) தயாரிப்புகளை அவனுக்காகத் தயார் செய்தளித்தேன்.
74:15ஜுஸ் 29 · ப. 575

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ15

பின்னரும், அவனுக்கு(ச் செல்வங்களை) நான் அதிகமாக்க வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்.
74:16ஜுஸ் 29 · ப. 575

كَلَّا ۖ إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا16

அவ்வாறில்லை! நிச்சயமாக அவன் நம் வசனங்களுக்கு முரண்பட்டவனாகவே இருக்கின்றான்.
74:17ஜுஸ் 29 · ப. 575

سَأُرْهِقُهُ صَعُودًا17

விரைவிலேயே, அவனைக் கடினமான ஒரு சிகரத்தின் மேல் ஏற்றுவேன்.
74:18ஜுஸ் 29 · ப. 575

إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ18

நிச்சயமாக அவன் (குர்ஆனுக்கு எதிராகச்) சிந்தித்து (ஒரு திட்டத்தை) ஏற்படுத்திக் கொண்டான்.
74:19ஜுஸ் 29 · ப. 576

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ19

அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:20ஜுஸ் 29 · ப. 576

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ20

பின்னரும், அவன் அழிவானாக! எப்படி அவன் ஏற்படுத்திக் கொண்டான்?
74:21ஜுஸ் 29 · ப. 576

ثُمَّ نَظَرَ21

பிறகும் (குர்ஆனின் வசனங்களை) அவன் நோட்டமிட்டான்.
74:22ஜுஸ் 29 · ப. 576

ثُمَّ عَبَسَ وَبَسَرَ22

பின்னர், (அதுபற்றிக் குறை கூற இயலாதவனாக) கடுகடுத்தான், இன்னும் (முகஞ்) சுளித்தான்.
74:23ஜுஸ் 29 · ப. 576

ثُمَّ أَدْبَرَ وَاسْتَكْبَرَ23

அதன் பின்னர் (சத்தியத்தை ஏற்காமல்) புறமுதுகு காட்டினான்; இன்னும் பெருமை கொண்டான்.
74:24ஜுஸ் 29 · ப. 576

فَقَالَ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ يُؤْثَرُ24

அப்பால் அவன் கூறினான்: "இது (பிறரிடமிருந்து கற்றுப்) பேசப்படும் சூனியமே அன்றி வேறில்லை.
74:25ஜுஸ் 29 · ப. 576

إِنْ هَٰذَا إِلَّا قَوْلُ الْبَشَرِ25

"இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை" (என்றும் கூறினான்.)
74:26ஜுஸ் 29 · ப. 576

سَأُصْلِيهِ سَقَرَ26

அவனை நான் "ஸகர்" (என்னும்) நரகில் புகச் செய்வேன்.
74:27ஜுஸ் 29 · ப. 576

وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ27

"ஸகர்" என்னவென்பதை உமக்கு எது விளக்கும்?
74:28ஜுஸ் 29 · ப. 576

لَا تُبْقِي وَلَا تَذَرُ28

அது (எவரையும்) மிச்சம் வைக்காது, விட்டு விடவும் செய்யாது.
74:29ஜுஸ் 29 · ப. 576

لَوَّاحَةٌ لِلْبَشَرِ29

(அது சுட்டுக் கரித்து மனிதனின்) மேனியையே உருமாற்றி விடும்.
74:30ஜுஸ் 29 · ப. 576

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ30

அதன் மீது பத்தொன்பது (வானவர்கள் நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
74:31ஜுஸ் 29 · ப. 576

وَمَا جَعَلْنَا أَصْحَابَ النَّارِ إِلَّا مَلَائِكَةً ۙ وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا لِيَسْتَيْقِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَيَزْدَادَ الَّذِينَ آمَنُوا إِيمَانًا ۙ وَلَا يَرْتَابَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْمُؤْمِنُونَ ۙ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۚ كَذَٰلِكَ يُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ ۚ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ ۚ وَمَا هِيَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ31

அன்றியும், நரகக் காவலாளிகளை மலக்குகள் அல்லாமல் நாம் ஆக்கவில்லை, காஃபிர்களுக்கு அவர்களுடைய எண்ணிக்கையை ஒரு சோதனையாகவே ஆக்கினோம் - வேதம் கொடுக்கப்பட்டவர்கள் - உறுதிகொள்வதற்கும், ஈமான் கொண்டவர்கள், ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும், முஃமின்களும் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கும் (நாம் இவ்வாறு ஆக்கினோம்); எனினும் எவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதோ, அவர்களும் காஃபிர்களும்; "அல்லாஹ் (பத்தொன்பது எனும் இந்த எண்ணிக்கையின்) உதாரணத்தைக் கொண்டு எ(ன்ன கருத்)தை நாடினான்?" என கேட்பதற்காகவுமே (இவ்வாறு ஆக்கினோம்). இவ்வாறே அல்லாஹ் தான் நாடியவர்களை வழிகேட்டிலும் விடுகிறான், இன்னும் தான் நாடியவர்களை நேர்வழியிலும் செலுத்துகிறான், அன்றியும் உம்முடைய இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறிய மாட்டார்கள், (ஸகர் பற்றிய செய்தி) மனிதர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.
74:32ஜுஸ் 29 · ப. 576

كَلَّا وَالْقَمَرِ32

(ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக.
74:33ஜுஸ் 29 · ப. 576

وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ33

இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது.
74:34ஜுஸ் 29 · ப. 576

وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ34

விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
74:35ஜுஸ் 29 · ப. 576

إِنَّهَا لَإِحْدَى الْكُبَرِ35

நிச்சயமாக அ(ந்த ஸகரான)து மிகப் பெரியவற்றுள் ஒன்றாகும்.
74:36ஜுஸ் 29 · ப. 576

نَذِيرًا لِلْبَشَرِ36

(அது) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றது-
74:37ஜுஸ் 29 · ப. 576

لِمَنْ شَاءَ مِنْكُمْ أَنْ يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ37

உங்களில் எவன் (அதை) முன்னோக்கியோ, அல்லது (அதிலிருந்து) பின்வாங்கியோ செல்ல விரும்புகிறானோ அவனை (அது எச்சரிக்கிறது).
74:38ஜுஸ் 29 · ப. 576

كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ38

ஒவ்வொரு மனிதனும் தான் சம்பாதிப்பதற்குப் பிணையாக இருக்கின்றான்.
74:39ஜுஸ் 29 · ப. 576

إِلَّا أَصْحَابَ الْيَمِينِ39

வலக்கைப்புறத்துத் தோழர்களைத் தவிர
74:40ஜுஸ் 29 · ப. 576

فِي جَنَّاتٍ يَتَسَاءَلُونَ40

(அவர்கள்) சுவர்க்கச் சோலைகளில் (இருப்பார்கள்; எனினும்) விசாரித்தும் கொள்வார்கள்-
74:41ஜுஸ் 29 · ப. 576

عَنِ الْمُجْرِمِينَ41

குற்றவாளிகளைக் குறித்து-
74:42ஜுஸ் 29 · ப. 576

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ42

"உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?" (என்று கேட்பார்கள்.)
74:43ஜுஸ் 29 · ப. 576

قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ43

அவர்கள் (பதில்) கூறுவார்கள்; "தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
74:44ஜுஸ் 29 · ப. 576

وَلَمْ نَكُ نُطْعِمُ الْمِسْكِينَ44

"அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை.
74:45ஜுஸ் 29 · ப. 576

وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ45

"(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
74:46ஜுஸ் 29 · ப. 576

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ46

"இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம்.
74:47ஜுஸ் 29 · ப. 576

حَتَّىٰ أَتَانَا الْيَقِينُ47

"உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்" எனக் கூறுவர்).
74:48ஜுஸ் 29 · ப. 577

فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشَّافِعِينَ48

ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
74:49ஜுஸ் 29 · ப. 577

فَمَا لَهُمْ عَنِ التَّذْكِرَةِ مُعْرِضِينَ49

நல்லுபதேசத்தை விட்டும் முகம் திருப்புகிறார்களே - இவர்களுக்கு என்ன நேர்ந்தது?
74:50ஜுஸ் 29 · ப. 577

كَأَنَّهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ50

அவர்கள் வெருண்டு ஓடும் காட்டுக்கழுதைகளைப் போல்-
74:51ஜுஸ் 29 · ப. 577

فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ51

(அதுவும்) சிங்கத்தைக் கண்டு வெருண்டு ஓடும் (காட்டுக் கழுதை போல் இருக்கின்றனர்).
74:52ஜுஸ் 29 · ப. 577

بَلْ يُرِيدُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُؤْتَىٰ صُحُفًا مُنَشَّرَةً52

ஆனால், அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட வேதங்கள் தனக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று நாடுகிறான்.
74:53ஜுஸ் 29 · ப. 577

كَلَّا ۖ بَلْ لَا يَخَافُونَ الْآخِرَةَ53

அவ்வாறில்லை: மறுமையைப் பற்றி அவர்கள் பயப்படவில்லை.
74:54ஜுஸ் 29 · ப. 577

كَلَّا إِنَّهُ تَذْكِرَةٌ54

அப்படியல்ல: நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.
74:55ஜுஸ் 29 · ப. 577

فَمَنْ شَاءَ ذَكَرَهُ55

(எனவே நல்லுபதேசம் பெற) எவர் விரும்புகிறாரோ அவர் இதை நினைவில் வைத்துக் கொள்ளட்டும்,
74:56ஜுஸ் 29 · ப. 577

وَمَا يَذْكُرُونَ إِلَّا أَنْ يَشَاءَ اللَّهُ ۚ هُوَ أَهْلُ التَّقْوَىٰ وَأَهْلُ الْمَغْفِرَةِ56

இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே (நம்) பயபக்திக்குரியவன், அவனே (நம்மை) மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு