Al-Ma'arij

سورة المعارج

சூரா 70 · மக்கிய்யா · 44 வசனங்கள்

70:1ஜுஸ் 29 · ப. 568

سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ1

(நிராகரிப்போருக்கு) சம்பவிக்கப் போகும் வேதனை பற்றி கேள்வி கேட்பவன் ஒருவன் (ஏளனமாகக்) கேட்கிறான்.
70:2ஜுஸ் 29 · ப. 568

لِلْكَافِرِينَ لَيْسَ لَهُ دَافِعٌ2

காஃபிர்களுக்கு (அது ஏற்படும்போது) அதனைத் தடுப்பவர் எவருமில்லை.
70:3ஜுஸ் 29 · ப. 568

مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ3

(அவ்வேதனை) உயர் வழிகளையுடைய அல்லாஹ்வினால் (ஏற்படும்).
70:4ஜுஸ் 29 · ப. 568

تَعْرُجُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ4

ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.
70:5ஜுஸ் 29 · ப. 568

فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا5

எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக.
70:6ஜுஸ் 29 · ப. 568

إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا6

நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.
70:7ஜுஸ் 29 · ப. 568

وَنَرَاهُ قَرِيبًا7

ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
70:8ஜுஸ் 29 · ப. 568

يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ8

வானம் உருக்கப்பட்ட செம்பைப் போல் ஆகிவிடும் நாளில்-
70:9ஜுஸ் 29 · ப. 568

وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ9

இன்னும், மலைகள் பஞ்சைப் போல் ஆகிவிடும் (நாளில்)-
70:10ஜுஸ் 29 · ப. 568

وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا10

(அனுதாபமுடையவனாக இருந்த) ஒரு நண்பன் மற்றொரு நண்பனை பற்றி (அனுதாபத்துடன்) விசாரிக்கமாட்டான்.
70:11ஜுஸ் 29 · ப. 569

يُبَصَّرُونَهُمْ ۚ يَوَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ11

அவர்கள் நேருக்கு நேர் காண்பார்கள், (ஆனால் விசாரித்துக் கொள்ள மாட்டார்கள்); அந்நாளின் வேதனைக்கு ஈடாகக் குற்றவாளி ஈடுகொடுக்கப் பிரியப்படுவான்: தன் மக்களையும்-
70:12ஜுஸ் 29 · ப. 569

وَصَاحِبَتِهِ وَأَخِيهِ12

தன் மனைவியையும், தன் சகோதரனையும்-
70:13ஜுஸ் 29 · ப. 569

وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ13

அவனை அரவணைத்துக் கொண்டிருந்த அவனுடைய சுற்றத்தாரையும்-
70:14ஜுஸ் 29 · ப. 569

وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ14

இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் (ஈடுகொடுத்துத்) தன்னைக் காப்பாற்றிக் கொள்ள (பிரியப்படுவான்).
70:15ஜுஸ் 29 · ப. 569

كَلَّا ۖ إِنَّهَا لَظَىٰ15

அவ்வாறு (ஆவது) இல்லை, ஏனெனில் நிச்சயமாக அ(ந்நரகமாவ)து கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகும்.
70:16ஜுஸ் 29 · ப. 569

نَزَّاعَةً لِلشَّوَىٰ16

அது (சிரசுத்) தோல்களை (எரித்து) கழற்றி விடும்.
70:17ஜுஸ் 29 · ப. 569

تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ17

(நேர்வழியைப்) புறக்கணித்துப் புறங்காட்டிச் சென்றோரை அ(ந்நரகத்தீயான)து அழைக்கும்.
70:18ஜுஸ் 29 · ப. 569

وَجَمَعَ فَأَوْعَىٰ18

அன்றியும், பொருளைச் சேகரித்து, பிறகு (அதைத் தக்கபடி செலவு செய்யாமல்) காத்துக் கொண்டானே (அவனையும் அது அழைக்கும்)
70:19ஜுஸ் 29 · ப. 569

۞ إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا19

நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்.
70:20ஜுஸ் 29 · ப. 569

إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا20

அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்,
70:21ஜுஸ் 29 · ப. 569

وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا21

ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான்.
70:22ஜுஸ் 29 · ப. 569

إِلَّا الْمُصَلِّينَ22

தொழுகையாளிகளைத் தவிர-
70:23ஜுஸ் 29 · ப. 569

الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ23

(அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள்.
70:24ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ24

அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு.
70:25ஜுஸ் 29 · ப. 569

لِلسَّائِلِ وَالْمَحْرُومِ25

யாசிப்போருக்கும் வறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு).
70:26ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ26

அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள்.
70:27ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ27

இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சியவாறு இருப்பார்களே அவர்கள்.
70:28ஜுஸ் 29 · ப. 569

إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ28

நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல.
70:29ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ29

அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்-
70:30ஜுஸ் 29 · ப. 569

إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ30

தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறவு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நிந்திக்கப்பட மாட்டார்கள்.
70:31ஜுஸ் 29 · ப. 569

فَمَنِ ابْتَغَىٰ وَرَاءَ ذَٰلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ31

எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள்.
70:32ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ هُمْ لِأَمَانَاتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُونَ32

இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
70:33ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ هُمْ بِشَهَادَاتِهِمْ قَائِمُونَ33

இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.
70:34ஜுஸ் 29 · ப. 569

وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ34

எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
70:35ஜுஸ் 29 · ப. 569

أُولَٰئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ35

(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள்.
70:36ஜுஸ் 29 · ப. 569

فَمَالِ الَّذِينَ كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ36

நிராகரிப்பவர்களுக்கு என்ன? (கழுத்துகளை நீட்டியவாறு அவர்கள்) உங்கள் முன் ஓடிவருகின்றனர்.
70:37ஜுஸ் 29 · ப. 569

عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ عِزِينَ37

வலப்புறமிருந்தும் இடப்புறமிருந்தும் கூட்டம் கூட்டமாக.
70:38ஜுஸ் 29 · ப. 569

أَيَطْمَعُ كُلُّ امْرِئٍ مِنْهُمْ أَنْ يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ38

அவர்களில் ஒவ்வொரு மனிதனும் பாக்கியமுள்ள சுவர்க்கத்தில் - ஜன்னத்துல் நயீமில் - நுழைந்துவிட ஆசைப்படுகிறானா?
70:39ஜுஸ் 29 · ப. 569

كَلَّا ۖ إِنَّا خَلَقْنَاهُمْ مِمَّا يَعْلَمُونَ39

அவ்வாறு (ஆகப் போவது) இல்லை. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்றார்களே, அதிலிருந்தே படைத்தோம்.
70:40ஜுஸ் 29 · ப. 569

فَلَا أُقْسِمُ بِرَبِّ الْمَشَارِقِ وَالْمَغَارِبِ إِنَّا لَقَادِرُونَ40

எனவே, கிழக்குத் திசைகள், மேற்குத் திசைகள் ஆகியவற்றின் இறைவனாகிய (நம்) மீது சத்தியமாக, நிச்சயமாக நாம் (விரும்பியவாறு செய்ய) ஆற்றலுடையோம்.
70:41ஜுஸ் 29 · ப. 570

عَلَىٰ أَنْ نُبَدِّلَ خَيْرًا مِنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ41

(அவர்களுக்கு பதிலாக) அவர்களை விடச் சிறந்தவர்களை நாம் மாற்றியமைப்பதில் (ஆற்றலுடையோம்) ஏனெனில் நம்மை (எவரும்) மிகைக்க இயலாது.
70:42ஜுஸ் 29 · ப. 570

فَذَرْهُمْ يَخُوضُوا وَيَلْعَبُوا حَتَّىٰ يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ42

ஆகவே, அவர்களுக்கு வாக்களிக்கப் பட்ட அந்த நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கவும் (வீணானவற்றில்) மூழ்கிக் கிடக்கவும், அவர்களை நீர் விட்டுவிடுவீராக.
70:43ஜுஸ் 29 · ப. 570

يَوْمَ يَخْرُجُونَ مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ43

நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) கப்றுகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.
70:44ஜுஸ் 29 · ப. 570

خَاشِعَةً أَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۚ ذَٰلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ44

அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியிருக்கும், இழிவு அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கும், அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அது அந்த நாள்தான்.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு

Abdullah Al-Mattrod - Al-Ma'arij · Tlawati