Al-Buruj

سورة البروج

சூரா 85 · மக்கிய்யா · 22 வசனங்கள்

85:1ஜுஸ் 30 · ப. 590

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ1

கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2ஜுஸ் 30 · ப. 590

وَالْيَوْمِ الْمَوْعُودِ2

இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3ஜுஸ் 30 · ப. 590

وَشَاهِدٍ وَمَشْهُودٍ3

மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4ஜுஸ் 30 · ப. 590

قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ4

(நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் கொல்லப்பட்டனர்.
85:5ஜுஸ் 30 · ப. 590

النَّارِ ذَاتِ الْوَقُودِ5

விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6ஜுஸ் 30 · ப. 590

إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ6

அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7ஜுஸ் 30 · ப. 590

وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ7

முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8ஜுஸ் 30 · ப. 590

وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ8

(யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:9ஜுஸ் 30 · ப. 590

الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ9

வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10ஜுஸ் 30 · ப. 590

إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ10

நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11ஜுஸ் 30 · ப. 590

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْكَبِيرُ11

ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:12ஜுஸ் 30 · ப. 590

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ12

நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:13ஜுஸ் 30 · ப. 590

إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ13

நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:14ஜுஸ் 30 · ப. 590

وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ14

அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:15ஜுஸ் 30 · ப. 590

ذُو الْعَرْشِ الْمَجِيدُ15

(அவனே) அர்ஷுக்குடையவன் பெருந்தன்மை மிக்கவன்.
85:16ஜுஸ் 30 · ப. 590

فَعَّالٌ لِمَا يُرِيدُ16

தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:17ஜுஸ் 30 · ப. 590

هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ17

(நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:18ஜுஸ் 30 · ப. 590

فِرْعَوْنَ وَثَمُودَ18

ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:19ஜுஸ் 30 · ப. 590

بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ19

எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:20ஜுஸ் 30 · ப. 590

وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ20

ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:21ஜுஸ் 30 · ப. 590

بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ21

(நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:22ஜுஸ் 30 · ப. 590

فِي لَوْحٍ مَحْفُوظٍ22

(எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

சூராவின் தொடக்கத்திலிருந்து இயக்கு